News Update :
Powered by Blogger.

தை திருநாள் : மகிழ்ச்சி பொங்கும் தமிழர் திருநாள்

Penulis : karthik on Saturday, 14 January 2012 | 00:04

Saturday, 14 January 2012

தைப் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் களை கட்டியுள்ளது.
புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி
செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை
கொண்டாடப்படுகிறது.
வளம் தரும் பொங்கல்
தை முதல்நாள் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்றும்,
அறுவடைத்திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில்
மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
பொங்கல் என்பது"பொங்கு' என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். வளம்,
செழிப்பு, மகிழ்ச்சி,ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின்
உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக
அமைந்துள்ளது.
நன்றி தெரிவிக்கும் விழா
ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும்,
உழைப்புக்கும் துணை இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும்
பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த
பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி,
மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும்
விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த
பண்டிகை ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.
வாசல் முன் வண்ண கோலமிட்டு அடுப்பு மூட்டி அதில் புதுப்பானை வைத்து அந்த
பானையில் இஞ்சி, மஞ்சள் செடிகளை கட்டி பொங்கல் வைக்கின்றர். புத்தரிசி,
வெல்லம், பால், நெய், முந்திரிபோன்றவைகளை கொண்டு பொங்கல் வைக்கின்றனர்.
பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோபொங்கல்' என்று வீட்டில் உள்ள
அனைவரும் உற்சாகத்துடன் கூறி மகிழ்வர். கிராமங்களில் பொங்கல் பொங்கும்
போது குலவை ஒலிக்க அரிசியையும், பாலையும் பானையில் இடுகின்றனர். பொங்கல்
சமைத்தவுடன் தலை வாழை இலை பரப்பி அதில் சமைத்த பொங்கலையும், கரும்பு
வைத்தும் படைத்து இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்துவர்.
கரும்பு படைப்பது ஏன்?
உழைப்பின் அருமையை கரும்பு நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி
உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும்.
இளமையில்கஷ்டப்பட்டு உழைத்தால்தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு
வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து
வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.
சூரியனுக்கு உகந்தஞாயிறு
இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி தை மாதம் பிறக்கிறது.
சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையிலும், உகந்த அஸ்தம்
நட்சத்திரத்திலும், சூரியபகவானின் நட்பாக கருதப்படும் விருச்சிக
லக்னத்திலும் தை மாதம் பிறக்கிறது. கர வருடத்தில், மகர சங்கராந்தி பலனும்
அதிக நன்மை கிடைப்பதாகவே கணக்கிடப்பட்டுள்ளது.
பொங்கலிட உகந்த நேரம்
வீடுகளில், புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பொங்கலிட உகந்த நேரம், நாளை
(ஞாயிற்றுக்கிழமை) காலை 7.35 மணியில் இருந்து 9.35 மணி வரையிலும்,
அதன்பின்10.35 மணியில் இருந்து பகல் 12 மணிவரையிலும் நல்ல நேரம் ஆகும்.
இந்த வேளைகளில், புத்தாடைஅணிந்து, புத்தரிசி கொண்டு பொங்கலிட்டு சூரிய
பகவானுக்கு படைத்து குடும்பத்துடன் உண்டு மகிழலாம் என வேத விற்பன்னர்கள்
தெரிவித்துள்ளனர்.
Tags: pongal , பொங்கல் , festival
Other articles
comments | | Read More...

கருணாநிதி மகள் செல்வி மீது மோசடி புகார்

Penulis : karthik on Friday, 13 January 2012 | 23:59

Friday, 13 January 2012

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி
வாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக முன்னாள்
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதுமோசடி புகார்
கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை வண்டியூர் மெயின்ரோடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி.
வக்கீலான இவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார்.
இவர் நேற்று காலை 11 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை
சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வக்கீலாக பணியாற்றி உள்ளேன். 2006-ல்
விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தி.மு.க.வில் இணைந்தேன். சென்னை
வேளச்சேரி தி.மு.க. பகுதிச்செயலாளர் ரவி, எனக்கு நன்கு அறிமுகமானவர்.
அவர், என்னிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 5
உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது என்றும், அதில் ஒரு உறுப்பினர்
பதவியை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றும்
தெரிவித்தார்.
2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு நான்
சென்றேன். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி இருந்தார்.
அவரிடம், என்னை வேளச்சேரி ரவி அறிமுகம் செய்துவைத்தார். செல்வியின்
மருமகன் டாக்டர் ஜோதிமணியின் அக்காள் உமாமகேஸ்வரியும் அப்போது அங்கு
இருந்தார்.
எனது கல்வித்தகுதி பற்றி கேட்டறிந்தனர். முன்பணமாக ரூ.25 லட்சம் வேண்டும்
என்றார்கள். நான் அடுத்த 2 நாட்களில் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து
ரூ.10 லட்சம் பணத்தை அதே ஓட்டலில் உமாமகேஸ்வரியிடம் கொடுத்தேன். 2010-ம்
ஆண்டு ஜுன் மாதம் 23, 24 தேதிகளில் செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக ரூ.50
லட்சமும், மாநாட்டுக்கு பின்பு ரூ.19 லட்சமும், ஆக மொத்தம் ரூ.69 லட்சம்
உமாமகேஸ்வரியிடம் வேளச்சேரி ரவி முன்னிலையில் அதே நட்சத்திரஓட்டலில்
கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் பேசியபடி தேர்வாணைய உறுப்பினர் பதவி எனக்கு
கிடைக்கவில்லை. வேறு 5 பேரை உறுப்பினர்களாக நியமித்தார்கள். உடனே நான்
பணத்தை திருப்பி கேட்டேன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
தருவதாக சொன்னார்கள். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சியின் பெரிய
பதவி பெற்றுத்தருவதாக கூறினார்கள். நான் கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டேன்.
எனக்குபணம் கிடைத்தால் போதும் என்று தெரிவித்தேன். வேளச்சேரி ரவி பணத்தை
திருப்பித்தருவதாக சொல்லி ஏமாற்றினார்.
கடந்த 12-ந் தேதி வேளச்சேரி ரவியை சந்தித்து எனது பணத்தை
கொடுக்காவிட்டால், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுப்பேன் என்று
தெரிவித்தேன்.அதற்கு அவர், `உன்னை யார் என்றே தெரியாது என
சொல்லிவிடுவேன்' என்று பதில் அளித்தார். பின்னர் என்னை மிரட்டினார்.
அப்போது எனது நண்பர் அழகேசன் மற்றும் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
என்னை ஏமாற்றி மோசடி செய்து தற்போது மிரட்டி வரும் வேளச்சேரி ரவி,
உமாமகேஸ்வரி மற்றும் செல்வி ஆகியோர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை
எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உமாமகேஸ்வரி மறுப்பு
இந்த நிலையில், வக்கீல் நல்லதம்பி கொடுத்துள்ள புகார் மனுவில்
இடம்பெற்றுள்ள உமாமகேஸ்வரி நேற்று மாலையில் போலீஸ் கமிஷனர்
அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கோபாலபுரத்தில் வசிக்கிறேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். எனது
கணவர் சென்னை துறைமுகத்தில் வேலைபார்க்கிறார். என்மீது புகார்
கொடுத்துள்ள நல்லதம்பி என்பவரை ஒரேயொரு முறை மட்டும் நட்சத்திர ஓட்டலில்
வைத்து பார்த்துள்ளேன். வேளச்சேரி ரவிதான் எனக்கு அறிமுகப்படுத்தி
வைத்தார். இவர்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி
என்று அறிமுகப்படுத்தினார். அவ்வளவுதான் எனக்கு தெரியும். அதன்பிறகு
நல்லதம்பியை நான் பார்த்ததே இல்லை.
அவர் என்மீது கொடுத்துள்ள புகார் அனைத்தும் அப்பட்டமான பொய் ஆகும்.
வேளச்சேரி ரவிக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு பற்றி எனக்கு எதுவும்
தெரியாது. இந்த பிரச்சினையில் வேண்டுமென்றே என்னை சிக்க வைத்து, எனது
பெயருக்கு களங்கம் உண்டாக்கியுள்ளனர்.
கடந்த வாரம் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நல்லதம்பியின் பிரச்சினை
குறித்து என்னிடம் தெரிவித்தார். நான் அப்போதே இந்த பிரச்சினையில் எனக்கு
தொடர்பில்லை என்றும், மிரட்டி பணம் பறிப்பதற்காக என்னையும் இந்த
பிரச்சினையில் சிக்கவைக்கிறார்கள் என்றும் கூறிவிட்டேன்.
மேலும் நட்சத்திர ஓட்டலில் செல்வியை சந்தித்ததாகவும் நல்லதம்பி
கூறியுள்ளார். அதுவும் தவறான தகவல் ஆகும். நல்லதம்பி எனக்கு அறிமுகம்
செய்து வைக்கப்பட்டபோது செல்வி அங்கு இல்லை. என்மீது கொடுத்துள்ள புகாரை
சட்டப்பூர்வமாக சந்திப்பேன்.
இவ்வாறு உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
comments | | Read More...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சொந்த வீட்டிலேயே ரூ.கோடி கொள்ளையடித்த இளம்பெண்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சொந்த வீட்டிலேயே ரூ. 1 கோடி
கொள்ளையடித்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லியைச் சேர்ந்தவர் அதிதி ஜெயின்(22). இன்டீரியர் டெகரேட்டராக
பணிபுரிந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு இவரது குடும்பத்தினர்
பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றனர். அதிதி மட்டும் வீட்டில்
இருந்தார்.
அப்போது வீட்டில் புகுந்த 3 முகமூடி கொள்ளையர்கள் தன்னை
கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்று
விட்டதாக போலீசாருக்கு அதிதி தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட்
பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது. வீட்டில்
இருந்த சிசிடிவி கேமராமின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. வைர நகைகள்
பணம் உள்பட ரூ. 1 கோடி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கொள்ளை
முடிந்து வீட்டின் பின்பக்க கேட் வழியாக கொள்ளையர்கள் தப்பியதும்
தெரியவந்தது.
விசாரணையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை வெளியில் இருந்துஉடைப்பது
இயலாது, வீட்டின் உள்ளே இருந்த நபர் கொள்ளையர்களுக்கு
உதவியிருக்கவேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர
விசாரணையில் அதிதி அவரது காதலன் அன்கித் பெங்கானி(24) என்பவருடன்
சேர்ந்து சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்தது தெரியவந்தது. தங்கள் காதலுக்கு
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு நகை,
பணத்துடன் ஓட்டம் பிடிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இருவரையும்
போலீசார் கைது செய்தனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger