News Update :
Powered by Blogger.

அதிமுகவிலிருந்து நீக்கம் ஏன்?- பரபரப்புத் தகவல்களைவெளியிடுகிறார் நடராஜன்!

Penulis : karthik on Friday, 13 January 2012 | 09:46

Friday, 13 January 2012

அதிமுகவிலிருந்து தான் , தனது மனைவி சசிகலா மற்றும் குடும்பத்தினர்
நீக்கப்பட்டதன் பின்னணி குறித்த பரபரப்புத் தகவல்களை தஞ்சாவூரில் தான்
நடத்தவுள்ள பொங்கல் விழாவின்போது நடராஜன் வெளியிடுவார் என்று
பரபரப்புத்தகவல் வெளியாகியுள்ளது.
தனது குடும்பத்துக்கும் , முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே என்ன
பிரச்சினை , என்ன காரணத்திற்காக தாங்கள் வெளியேற்றப்பட்டோம் என்பது
உள்ளிட்ட பல தகவல்களை அவர் அந்தவிழாவின்போது அம்பலப்படுத்தவுள்ளதாகவும்
கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.
மன்னார்குடி வகையறா , மன்னார்குடி குடும்பம் என பல்வேறு செல்லப்
பெயர்களால் அழைக்கப்பட்டு வரும் சசிகலா குடும்பத்தினர் சமீபத்தில்
கூண்டோடு அதிமுகவை விட்டு விரட்டப்பட்டனர். ஆனால் நீக்கப்பட்ட பின்னர்
இவர்களில்யாருமே இதுவரை வாய் திறக்காமல் உள்ளனர். இவர்களைத் தவிர
இவர்களது ஆதரவாளர்கள் பலரும் கூட தொடர்ச்சியாக நீக்கப்பட்டும் ,
மாற்றப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் முதல் முறையாக சசிகலா குடும்பத்தினர் வாய் திறக்கப்
போகின்றனர். குடும்பத்தினர் சார்பாக அவர்களின் தலைவராக
கருதப்படும்நடராஜன் , அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது
குறித்து தங்களது தரப்பு நியாயத்தை தஞ்சாவூரில் தான் நடத்தவுள்ள பொங்கல்
விழாவின்போது விரிவாக எடுத்துரைக்கப் போகிறாராம். அப்போது பல விஷயங்களை
அவர் பகிரங்கப்படுத்தப் போவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சாவூரில் கலை மற்றும் கலாச்சார
நிகழ்ச்சிகளுடன் விழா நடத்துவது நடராஜன் வழக்கம். அந்த வகையில் ,
தற்போதைய பொங்கல்பண்டிகையயையொட்டியும் அவர் விழா நடத்துகிறார்.
தமிழர் கலை இலக்கிய திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழா
தஞ்சாவூரில் உள்ள நடராஜனுக்குச் சொந்தமான கல்யாணமண்டபத்தில்
நடைபெறவுள்ளு. இதில் தான் சார்ந்த முக்குலத்தோர் வகுப்பு பிரமுகர்களையும்
, நண்பர்களையும் அழைத்துள்ளாராம். இந்த நிகழ்ச்சியில் தனது பலத்தைக்
காட்டவும் , தேவர் சமூகத்தினர் தன் பக்கம்தான் உள்ளனர் என்பதை காட்டவும்
தேவர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்களையும் கண்டிப்பாக
வருமாறு அழைத்துள்ளாராம் நடராஜன்.
3 நாள் விழாவாக இது நடைபெறுகிறது. ஜனவரி 15ம் கலை , கலாச்சார
நிகழ்ச்சியாக நடைபெறும். ஜனவரி 16ம் தேதி 2வது நாள் விழாவில் , அடுத்த
நாள் முல்லைப் பெரியாறு-வரலாறு , பிரச்சினைகள் மற்றும் தீர்வு என்ற
பெயரில் மாநாடாக நடைபெறுகிறது.
3வது நாளான ஜனவரி 17ம்தேதி தான் எழுதிய மூன்று புத்தகங்களை
வெளியிடுகிறார். பழ.நெடுமாறன் , காசி ஆனந்தன் உள்ளிட்டோர் இந்த
விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனராம்.
விழாவின் இறுதி நாளில் சிறப்புரையாற்றுகிறாராம் நடராஜன்.அப்போதுதான்
ஜெயலலிதா குறித்தும் , அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது
குறித்தும் விரிவான விளக்கம் அளித்துப் பல்வேறு தகவல்களை அவர் வெளியிடப்
போவதாக கூறப்படுகிறது.
அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் நடராஜன் குடும்பத்தினர்
கூண்டோடு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இதில்நடராஜன் குடும்பத்தினர் அத்தனை பேரும் கலந்து கொள்ளவுள்ளனராம்.
comments | | Read More...

ஊழலுக்கு இடதுசாரி மட்டும் என்ன விதிவிலக்கா ? கேரள மாஜி முதல்வர் அச்சு.,மீது நில மோசடிவழக்கு

நாட்டில் எந்தகட்சிதான் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தரப்போகிறதோ என்ற
கேள்விதான் எழுந்தி நிற்கிறது. காரணம் காங்கிரஸ் முதல் கம்யூ., வரை எந்த
ஒரு கட்சியும் யோக்கியவான் என்ற நெஞ்சு நிமிர்த்து சொல்ல திராணி இல்லாமல்
போயிருக்கிறது என்பதுதான் நிசப்தம். ஜார்கண்ட் முதல்கர்நாடகாவரை பல்வேறு
முதல்வர்கள் ஊழல் வழக்கில் சிக்கியவர்களாகத்தான் இருக்கின்றனர். கேரள
மாநிலத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்தவரும் வாய்சொல்லில் வீரருமான
அச்சுதானந்தன் மீது தற்போது நில மோசடி வழக்கு பதிவாகியிருக்கிறது. இன்று
கோழிக்கோடு கோர்ட்டில் இதற்கானஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகிறது. இவரது
ஆட்சி காலத்தில் காசர்கோடு என்ற மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கு
இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட து.
இதில் அச்சுதானந்தன் தனது உறவினருக்கு முறைகேடாக இடம் ஒதுக்கி சலுகை
காட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து புகார் செய்யப்பட்டு , பல
யோசனைகளுக்குபின்னர் விசாரணை நடத்தப்பட்டது. இதில் உண்மை இருந்ததயைடுத்து
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இவருடன்
அமைச்சராக இருந்த கே.பி., ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உள்பட 7 பேர்
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சேர்க்ப்பட்டுள்ளனர்.
மார்க்., கம்யூ., கட்சியை சேர்ந்தவி.எஸ்., என்றழைக்கப்படும் அவர்
பேச்சுதிறன் கொண்டவர்.இவர் 1985 முதல் இந்த கட்சியின் பொலிட்பீரோ
உறுப்பினாராக இருந்து வருகிறார். கேரளாவில் கம்யூ., கட்சியை பலப்படுத்திய
பெருமை இவருக்கு உண்டு.
ஆழப்புழா மாவட்டத்தில் பிறந்த இவருக்கு வயது 88. நான் நேர்மையானவன்
என்கிறார் அச்சு எனது மீது காங்கிரஸ் அரசு, சேறு வாரி பூசுவதற்காக லஞ்ச
ஒழிப்பு துறையை பயன்படுத்தியிருக்கிறது. நான் எவ்வித தவறும் செய்யவில்லை.
நான் 50 ஆண்டுகால அரசியலில் இருப்பவன். மக்களுக்கு என்னைப்பற்றி
தெரியும். சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்றார் அச்சு. ஆனால் கேரள
காங்கிரஸ் இதனை மறுத்துள்ளது. இதில் எவ்வித பழிவாங்கும் நோக்கமும் இல்லை
என்று கூறியிருக்கிறது. எதிர்கட்சி தலைவர் பதவி ராஜினாமா ? மோசடி வழக்கு
தொடர்வதையொட்டி அச்சுதானந்தன் தனது எதிர்கட்சிதலைவர் பதவியில் இருந்து
விலக முடிவு செய்திருக்கிறார். இதற்கென அவர் தன்னை பதவியில் இருந்து
விடுவிக்குமாறு சி.பி.ஐ.எம்., மத்தியக்குழுவிடம் அனுமதி கேட்டுள்ளார்.
comments | | Read More...

கமல்-தனுஷ்-ஜாக்கிசான்! ஆஸ்கார் தயாரிப்பில்!

மிகப்பெரிய பட்ஜெட்டில் படமெடுக்க திட்டமிடும் இயக்குனர்களின் நினைவிற்கு
வரும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். கமல்ஹாசன் நடித்த தசாவதாரம்
படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தான்.
இந்த வருடத்தின் இறுதிக்குள் கமல்ஹாசனும் ரவிச்சந்திரனும் இணைவார்கள் என
தெரிகிறது. இதை பற்றி ரவிச்சந்திரன் " தசாவதாரம் படத்திற்கு அடுத்ததாக
கமலும் நானும் இணைவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
கமல் இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் " விஸவரூபம் " படம் முடிந்ததும்
என் படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். படத்தை பற்றிய மற்ற தகவல்கள்
விரைவில் வெளிவரும். " என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
கமல்ஹாஸனை புக் செய்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் அடுத்ததாக நடிகர் தனுஷுடன்
இணைகிறார். தனுஷ் நடிக்கும் 3 படத்தின் படப்பிடிப்பு கடைசி
கட்டத்தில்இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும் சிறிய ஓய்விற்குப்பின்
ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தில் நடித்துக் கொடுப்பதாகதனுஷ் ஒப்புக்
கொண்டுள்ளார்.
இது பற்றி ரவிச்சந்திரன் " தனுஷ் ஆஸ்கார் நிறுவனத்தின் தயாரிப்ப்பில்
நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய இளம்நடிகர்களில் சிறந்தநடிகர்
தனுஷ் " என்று புகழாரம் சூட்டியுள்ளார். இயக்குனர்களுடன்
பேசிக்கொண்டிருப்பதாகவும் , தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டதாகவும்
கூறியுள்ளார்.
தனுஷ் மற்றும் கமல்ஹாஸனை புக் செய்துள்ள தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்
ஹாலிவுட் நடிகர்ஜாக்கிசானையும் புக் செய்திருப்பதாக தெரிகிறது.
ஜாக்கிசான் நடிக்கும் படத்தை தயாரிக்கப் போகும் ரவிச்சந்திரன் அந்த
படத்தில் தமிழ் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்களையும் நடிக்க
வைக்கும் திட்டத்தில் உள்ளதாக பேசிக்கொள்றார்கள்.
ஆஸ்கார் ரவிச்சந்திரனும் , ஜாக்கிசானும் நல்ல நண்பர்கள். ரவிச்சதிரன்
தயாரித்த தசாவதரம்படத்தின் பாடல் வெளிட்டு நிகழ்ச்சிக்கு ஜாக்கிசான்
சிறப்பு விருந்தினராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger