News Update :
Powered by Blogger.

நடிகை சுஹாசினியுடன்இயக்குனர் சேரன் மோதல்

Penulis : karthik on Saturday, 7 January 2012 | 18:33

Saturday, 7 January 2012

நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கும் படம்
பனித்துளி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம்
திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சுஹாசினி மணிரத்னம் , தயாரிப்பாளர் டி. சிவா , இயக்குனர்
சேரன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் டி. சிவாபேசியதாவது ;-
'' சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவதற்கு தியேட்டர்கள் இல்லாததால் நிறைய
தயாரிப்பாளர்கள் நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். ஆதலால் தயாரிப்பாளர்கள்
சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம்.
அதன்படி பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் இனிமேல் ஜனவரி 14 , ஏப்ரல் 14 ,
மே 1 , ஆகஸ்ட் 15 , தீபாவளி என வருடத்தில் இந்த ஐந்து நாட்களில் மட்டுமே
வெளியாக வேண்டும்.
மற்ற நாட்களில் குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட்டுக் கொள்ள வழிவகை
செய்யப்பட்டுள்ளது '' என்றார்.
நடிகை சுஹாசினி பேசியதாவது:-
"நான் ஒரு நடிகையாகவோ , சினிமா சார்ந்தவராகவோ இல்லாமல் சாதரண பெண் ரசிகை
என்ற அளவில் ஒரு கோரிக்கையை இங்கே வைக்கிறேன். ஹீரோக்களில் எம்.ஜி.ஆர் ,
கமல் , அரவிந்த் சாமி , அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ்
ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். நடிகைகளை மட்டும் அழகழகாக
அறிமுகப்படுத்துகிறீர்களே... ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை
அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்" என்றார்.
இயக்குனர் சேரன் பேசியதாவது:-
'' சுஹாசினி பேசிய ஹேண்ட்சம் ஹீரோக்கள் எல்லோருமே வெள்ளை நிறமுடையவர்கள்
என்பதால் அப்படி சொல்லி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்களிலும்
ஹேண்ட்சம் ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேடம். அவர்களையும் ரசியுங்கள் ''
என்றார்.
இருவருக்குமிடையேயான இந்த ' ஹேண்ட்சம் ' குறித்த மோதல் , எல்லோரிடமும்
புன்னகை கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படின்னா இந்த அம்மணி மணிரத்தினத்தை (அதாங்க இவங்க புருஷன்) ரசிக்கிறதே
இலையோ ...!!
கொஞ்ச நாளாவே இந்த அம்மணி ஓவரா தான் போய்கிடு இருக்கு மணிரத்தினம் சார்
பார்த்துங்கோ.....
comments | | Read More...

எங்கே போகிறது இந்தியா ! கலாசாரத்தை'?' ஆக்கிய வீடியோ பார்க்கத்தவறாதீர்கள்

For video click here
[img]https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheqmuUVOgtBH-bD2YSUR8HoQlUwkmPd6nmWqyI-UvjH163XxF_UPEuEMgCQ91yYclKsqcI8UmYkIQhNV14jBEBQNdTV8N62iM2cIj8UVY4-YPnzKnETG6UA93uGGfnfqGuPsZ6L1D4zUw/s1600/0.jpg[/img]
இப்படியும் உலகில் ஒரு நாடா என்று உலகையே ஆச்சரியப்பட வைக்கும்
கலாச்சாரத்தை கொண்டதுதான் நமது இந்திய கலாசாரம்! இன்று கொஞ்சம் கொஞ்சமாக
மேலை நாட்டு மோகத்தால் நமது கலாசாரம் மறைந்து வருகிறது என்பதை விட
அழிந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. அதற்கு எடுத்துக்காட்டு தான்
இந்த வீடியோ!! இதை பார்க்கும் போது நாம் மேலை நாட்டு கலாசாரத்தையே தூக்கி
சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு கலாசார சீரழிவில் மூழ்கும் காலம் மிக
விரைவில் இருப்பதாகவே எண்ண தோன்றுகிறது!!!
comments | | Read More...

நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவினர் கொடூரத் தாக்குதல்

ஜெயலலிதாவின் அட்டைப்படம் தாங்கி வந்துள்ள நக்கீரன் இதழைக் கொளுத்திய
அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும்
தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில்
அந்த பத்திரிகையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் பலர் கல்
மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து
நொறுக்கினர். இதனையடுத்து அங்குபரபரப்பு ஏற்பட்டது.
வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு
வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.
அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின்
உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், ராசிபுரம், விருதுநகர்மாவட்டம்
சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த
கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து
எரித்தனர். சில கடைகளில் அதிமுகவினர் புகுந்து புத்தகங்களை அள்ளி
சென்றனர்.
இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில், போலீசாருக்கு பல முறை தொடர்பு
கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த
போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயேதாக்குதல் நடந்தது என்றார்.
இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம்
தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில் இது
போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர்
குறித்து அவதூறாக செய்திவெளியானால் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு
தொடர வாய்ப்பு இருக்கிறது. அதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி
விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger