News Update :
Powered by Blogger.

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா

Penulis : karthik on Friday, 6 January 2012 | 02:48

Friday, 6 January 2012

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பேர் சூட்டுவிழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்லமாக
'பேட்டி பி' என்று பெயரிட்டனர். ஆனால் முறைப்படி குழந்தைக்கு பெயர்
சூட்டவில்லை.
இந்நிலையில் 'ஏ' என்ற எழுத்தில் தொடங்கும்படியான பெயரை தேர்வு செய்து
அனுப்பும்படி ரசிகர்களுக்கு அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து நூற்றுக்கணக்கில் அவருக்கு பெயர்களை ரசிகர்கள் அனுப்பி
வைத்தனர். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதை குடும்பத்தினர் தற்போது
முடிவு செய்து விட்டனர்.
ஜனவரி 13ம் தேதி பெயர் சூட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதற்காக அமிதாபின்வீடு இப்போதே களைகட்டி உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை
அமிதாப் பச்சனும், அவரது மனைவி ஜெயா பாதுரியும் செய்து வருகின்றனர்.
இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் மும்பை நட்சத்திரங்களும்
பங்கேற்கின்றனர்.
comments | | Read More...

வயது பிரச்சினைக்காக ராணுவ அமைச்சகத்துடன் மோதல் இல்லை - ராணுவ தலைமை தளபதி

இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் வி.கே.சிங் தொடர்பான ஆவணங்களில்
பிறந்த தேதி 1950-ம்ஆண்டு மே 10 என இருக்கிறது. ஆனால், 1951-ம் ஆண்டு மே
10-ந் தேதி அன்று பிறந்ததாக வி.கே.சிங் கூறுகிறார். இதை, ராணுவ அமைச்சகம்
நிராகரித்து விட்டது.எனவே, ஓராண்டுக்கு முன்பே ஓய்வு பெற வேண்டிய
நிலையில் சிங் இருக்கிறார். இது தவிர, `பாகிஸ்தான் தளபதி போல என்னை
நடத்துகின்றனர்' என்றும் சில நாட்களுக்கு முன் சிங் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், தன்னுடைய வயது விவகாரம் தொடர்பாக ராணுவ
அமைச்சகத்துக்கு எதிராக கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்வார் என
தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவரிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது,
`இது போன்ற எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை. எனக்கும் ராணுவ
அமைச்சகத்துக்கும் இடையே எந்தவித சர்ச்சையும் கிடையாது. இது முற்றிலுமாக
தனிப்பட்ட விவகாரம்' என்றார்.
comments | | Read More...

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்!

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உடைகளைக்
கண்டறிவது என்பது சற்று சிரமமான வேலைதான்.
சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் இந்த சிரமம்
இருப்பதில்லை. மேலும் அவர்களுக்கு மார்பகங்களை எடுப்பாக்கி்க் காட்டும்
வகையிலான உடைகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் பெரிய மார்பகப்
பெண்களுக்கு இந்த வசதிகள் இல்லை.
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் எந்த மாதிரியான உடைகளைத் தேர்வு
செய்யலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...
*. மூடிய கழுத்துடைய உடைகளை ஒருபோதும் தேர்வு செய்யாதீர்கள்.
அப்படிப்பட்ட உடைகள் உங்களது மார்பகங்களை மேலும் பெரிதானதாக காட்டி
விடும்.
*. அதிக கிளீவேஜ் தெரியும்படியானஉடைகளையும் தவிர்ப்பது நல்லது.இது
அழகாகக் காட்டுவதற்குப் பதில் அகோரமாக காட்டி விடும்.
*. மிகவும் டைட்டான உடைகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.சற்றே லூசான
உடைகளைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
*. குர்தா உள்ளிட்ட உடைகளைத் தாராளமாக தேர்வு செய்யலாம். இது அழகாகவும்
காட்டும், அகோரத்தையும் குறைக்கும். இதுபோன்ற நீளமான உடைகள் உங்களது
உடல்வனப்பைக் காட்டுமே தவிர அதன் அளவைக் குறைத்தேக் காட்டும். எனவே இது
சவுகரியமானது.
*. சல்வார் போன்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவை மார்புக்குக் குறுக்கே
இருப்பது போல, மார்பகங்களை மூடுவது போல போட்டுக் கொள்வது நன்றாக
இருக்கும்.
*. கழுத்தை ஒட்டிய பேஷன் கவரிங் நகைகளை போட்டுக் கொள்வது இன்னொரு
புத்திசாலித்தனமான செயல். இதுபோல போடும்போது மார்பகங்களுக்குப் பதில்
உங்களது கழுத்தை நோக்கி மற்றவர்கள் பார்வை செல்லும். உங்களுக்கும் அழகு
கூடி, தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
இதுபோல சின்னச் சின்ன மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உங்களது அழகையும்
கூட்டலாம், மற்றவர்களின் பார்வையிலிருந்தும் தப்பலாம்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger