News Update :
Powered by Blogger.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தபால்தலை வெளியீடு- பிரான்ஸ் அஞ்சல் துறை அங்கீகாரம்

Penulis : karthik on Monday, 2 January 2012 | 04:48

Monday, 2 January 2012


Prabhakaran Stamp

பிரான்ஸ்: பிரான்ஸ்சில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தபால்தலை வெளியிடடப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலரான கார்த்திகைப் பூ, புலிக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தைக் கொண்ட 4 வகையான தபால் தலை முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தபால் முத்திரைகளுக்கு பிரான்ஸ் அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இவற்றைப் பயன்படுத்தி தங்களது தபால்கள் மற்றும் சரக்குகளை தமிழர்கள் அனுப்ப முடியும் என தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரான்ஸ் வாழ் சிங்கள மக்கள் மற்றும் இலங்கை அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் தூதரகம் கூறுகையில், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் சின்னங்களைக் கொண்ட தபால் தலைகள் வெளியானது குறித்து எங்களுக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அஞ்சல்துறை லபோஸ்ட் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
comments | | Read More...

மனைவி முன்னால் ரயிலில் அடிபட்டு கணவன் பலி

Penulis : karthik on Sunday, 1 January 2012 | 19:21

Sunday, 1 January 2012

ஆவடி:ரயிலுக்கு காத்திருந்த மத்திய அரசு ஊழியர், ரயிலில் ஏற முயற்சித்த
போது, கால் தடுமாறி, தண்டவாளத்தில் விழுந்து, மனைவி கண் முன் ரயிலில்
அடிபட்டு பலியானார்.சென்னை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ள
வேப்பம்பட்டு, மல்லிகை தெருவைச் சேர்ந்தவர் பாபு சிங்,56. இவர், சென்னை
அண்ணா நகரில் உள்ள மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில் துணை
கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் மாலை,தனது மனைவி
கோமல் சிங்குடன், முகப்பேரில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார்.
பின், அங்கிருந்து ரயில் மூலம் ஆவடிக்கு வந்தார்.அங்குள்ள
மார்க்கெட்டில், வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு,
வீட்டிற்கு செல்ல மனைவியுடன் ஆவடி ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.
நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த ரயிலில் ஏற, பிளாட்பாரத்தில்
நின்றிருந்த பாபு சிங் தயாரான போது, அவரது கால் தடுமாறி தண்டவாளத்தில்
விழுந்தார். அப்போது, அங்கு வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே
பலியானார். இது குறித்து, ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர்
comments | | Read More...

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ரூ.264 கோடியை அள்ளித் தந்தார் முதல்வர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் வழங்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புத்தாண்டுதினத்தன்று முதல்வர்
பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு, அனைத்து ஊழியர் சங்கங்களும் பாராட்டு
தெரிவித்துள்ளன. இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 3,000
ரூபாய் கிடைக்கும். அரசுக்கு கூடுதலாக,264 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
அ.தி.மு.க., அரசு அமைந்த பின், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள்
நிறுத்தப்படுமென பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், தீபாவளியின் போதே,
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அதிகபட்சம் 20 சதவீதம் வரை போனஸ் வழங்க,
முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டார். அதையடுத்து, சிறப்பாக பணியாற்றும் அரசு
ஊழியர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை
சமீபத்தில் வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, நேற்று புத்தாண்டு
பிறந்ததும், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில், பொங்கல் போனஸ்
வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால், அரசு ஊழியர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான அரசு ஊழியர்
சங்கங்கள், இந்த உத்தரவுக்கு பாராட்டு தெரிவித்து, மகிழ்ச்சியை
வெளிப்படுத்தியுள்ளன.
முதல்வரின் உத்தரவுப்படி, 2010-11ம் ஆண்டிற்கு, "சி' மற்றும் "டி' பிரிவை
சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும், 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையாக, 3,000
ரூபாய் உச்சவரம்புக்கு உட்பட்டு, போனசும், "ஏ' மற்றும்"பி' பிரிவைச்
சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும், 1,000 ரூபாய் சிறப்பு போனஸ்
வழங்கப்படும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முன்னாள்
கிராம அலுவலர்களுக்கு தலா 500 ரூபாய்பொங்கல் பரிசு வழங்க, முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது
அதற்கு மேலாக பணிபுரிந்து, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெறும், முழு
நேர மற்றும் பகுதி நேர சில்லரைச் செலவின பணியாளர்கள், தொகுப்பூதியம்
பெறும் பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு திட்டம்,
அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு, 1,000 ரூபாய்
வழங்க முதல்வர் உ த்தரவிட்டுள்ளார்.
ரூ.264 கோடி செலவு: இதேபோல, ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி
உதவியாளர்கள்,
மக்கள் நலப்பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான
தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோருக்கும்,
சிறப்பு ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள்
ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்
குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம், இந்திய வேளாண்
ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் பெறும் அனைவருக்கும் இந்த போனஸ்
வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 264 கோடி ரூபாய் செலவாகும்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger