News Update :
Powered by Blogger.

25 லட்சம் கொடுங்க... தனுஷின் புது டாரிஃப்

Penulis : karthik on Tuesday, 20 December 2011 | 08:52

Tuesday, 20 December 2011

 
 
 
அடிக்கடி பாலிவுட் பக்கம் தென்படுகிறார் தனுஷ். ஏதோ அபிஷேக் பச்சன், ஷாரூக்கான் போன்ற முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்க போயிருக்கிறார் என்பது போல தமிழ்நாட்டில் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தப்பான மெட்டு தவறிப் போய் ஹிட்டாவது மாதிரி, இந்த பில்டப்புக்கும் ஒரு வடிவம் கொடுத்துவிட்டார்கள் பத்திரிகைகளில். அதாவது, தனுஷ் அடிக்கடி பாலிவுட் பக்கம் செல்வது அவர் இயக்கப் போகும் முதல் படத்தின் ஹீரோவை தேடுவதற்காகதான் என்பது போல. உண்மையில் என்ன நடக்கிறது அங்கே?
 
ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடலுக்கு விஷுவல் அமைத்துக் கொடுத்த பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். முதலில் கமலிடம் கால்ஷீட் கேட்டிருந்த பரத்பாலா, கொய்யாக்காய் சிறுத்து சுண்டைக்காயானது போல தனுஷ் வரைக்கும் வந்துவிட்டார். அவரது அழைப்பை கர்ம சிரத்தையாக ஏற்றுக் கொண்ட தனுஷ், இந்த புதிய படத்தின் டிஸ்கஷனுக்காகதான் அவ்வப்போது பாலிவுட் பக்கம் போகிறாராம்.
 
தனுஷ் பற்றி இன்னொரு ஆச்சர்யமான தகவல். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறிடி உலகம் முழுக்க பாப்புலர் ஆகிவிட்டதல்லவா? பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரை பாட அழைக்கிறார்களாம். எந்த நாட்டிலிருந்து இவரை பாட அழைத்தாலும் ஓ.கே என்கிறாராம் தனுஷூம். ஆனால் ஒருமுறை பாட 25 லட்சம் சன்மானத்தை நிர்ணயித்துவிட்டார். இதற்காக முன்னாலேயே வாங்கியிருக்கும் அட்வான்சை கூட்டிக்கழித்து பார்த்தால் மூன்று பட சம்பளத்தை தாண்டும் என்கிறார்கள் இப்போதே.



comments | | Read More...

வைகோவை காணவில்லை : தேடும் உளவுத்துறை

 
 
 
பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
 
தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது.
 
 
ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிட்டு வரும் நிலையில், வைகோ கம்பம் பகுதிக்கு சென்றால் பிரச்னை பெரிதாகி விடும் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.
 
மேலும் வைகோவின் செயல்பாடுகளை கடந்த நான்கு நாட்களாக உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கம்பத்தில் 144 தடையுத்தரவு தொடர்வதால், தேனியிலேயே வைகோவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 
ஆனால், நேற்று நள்ளிரவு கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள கிராமத்திற்கு வைகோ ரகசியமாக சென்றதாக தகவல் பரவியுள்ளது.
 
நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைகளை பார்வையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வைகோ ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவையில் நடந்த பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்த குறும்பட சிடி வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
 
நேற்று தேனியில் கேரள அரசை கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் திடீரென தீக்குளித்தார். படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேற்று இரவு வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
ஆனால் அதன் பின்னர் வைகோ எங்கு சென்றார் என தெரியாததால் போலீஸ், உளவுத்துறை குழம்பி போய் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகோவின் உறவினர்கள், கட்சியினரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்தபடி உள்ளனர்.



comments | | Read More...

முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த மம்முட்டி

 
 
 
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் மம்முட்டி இன்று மதியம் சந்தித்தார். சுமார் 15 நிமிடம் வரை நீடித்த இந்தச் சந்திப்பு குறித்து மம்முட்டி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
 
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த மம்முட்டி தனது காரில் ஏறி உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.
 
கேரளாவில் உள்ள மலையாள சினிமா அமைப்புகள் முல்லைப் பெரியாறு விவகாரத்திற்காக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வருடனான மம்முட்டியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger