News Update :
Powered by Blogger.

முல்லைப் பெரியாறு: நான் சொன்னது தான் நடந்திருக்கு- வைகோ

Penulis : karthik on Tuesday, 13 December 2011 | 04:42

Tuesday, 13 December 2011

 
 
 
 
 
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கால் போராட்டம் வெடிக்கும் என்று தான் கடந்த 10 ஆண்டுகளாக சொன்னது தான் நடந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கேரள அரசு கையாளும் விதத்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று நான் கடந்த 10 ஆண்டுகளாக கூறி வந்தது தான் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தற்போது தன்னெழுச்சியான பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன.
 
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாட்டை வரவேற்கிறேன். அதிலும் குறிப்பாக அணை பிரச்சனையில் இரு மாநிலங்களுக்கிடையே மத்திய அரசு ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது. வரும் 21ம் தேதிதமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை மதிமுக சார்பில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றார்.
 
கடந்த 2008ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதிமுக சார்பில் நடந்த கருத்தரங்கில் வைகோ இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



comments | | Read More...

குளிர்பான விளம்பரத்தில் சிம்பு!

 
த்ரிஷா ,சினேகா, நமீதா, அஞ்சலி, ஸ்ரேயா என்று நடிகைகள் நடித்து வந்த விளம்பர படங்கள், தற்போது நடிகர்களையும் தொற்றி கொண்டுள்ளது. விக்ரம், பிரபு, கார்த்தி ஆகியோர் வரிசையில் இப்போது விஜய்யும் சேர்ந்துவிட்டார். இதையடுத்து அந்த வரிசையில் இப்போ சிம்புவும் சேர்ந்துள்ளார். இதன்மூலம் நடிகர், நடிகையருக்கு நல்ல வருமானம் என்பதையும் தாண்டி, நல்ல விளம்பரம் கிடைக்கிறது. எனவே பலரும் விளம்பரங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது, சிம்பு அவர் நடித்த, ஒஸ்தி ரிலிஸ் ஆனதும் குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.
 
இதுபற்றி சிம்பு நம்மிடம் கூறும்போது, 3 வருடங்களாகவே பல விளம்பர நிறுவனங்கள் என்னை நடிக்க கேட்டு கொண்டே இருந்தன. ஆனால் எனக்கு பணம் முக்கியம் இல்ல, என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் நான் நடிக்கவில்லை. இப்போது 7-அப் கம்பெனி கேட்டு கொண்டதால் நடித்து கொடுத்தேன். தெலுங்கில் அல்லு அர்ஜூனா நடித்துள்ளார். விரைவில் தமிழில் எல்லா சேனலிலும் என்னை பார்க்கலாம் என்று கூறினார்.



comments | | Read More...

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைக்க வேண்டும்

 
 
வாக்கெடுப்பு நடத்தி இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் ஜே.எம்.ஆருண், என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பிரதமரை சந்தித்த இருவரும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
 
மேலும் கேரளாவில் உள்ள இடுக்கி, தேவி குளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும். இதற்காக அங்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
 
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும் என்றும், அந்த அணை வலுவாகவே இருப்பதால் புதிய அணை கட்ட தேவை இல்லை என்றும் எடுத்துக் கூறினர்.
 
பின்னர் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோரையும் சந்தித்து அணைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க இரு மாநில அரசுகளையும் மத்திய அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
 
அதே போல ஏ.கே.அந்தோணியை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்தாகூர் உள்ளிட்ட சில தமிழக எம்பிக்களும் சந்தித்துப் பேச்சு நடத்தினர். சந்திப்புக்குப் பின் மாணிக்தாகூர் கூறுகையில், இந்தப் பிரச்சனையில் ஏ.கே.அந்தோணி தலையிட்டு பதற்றத்தை தணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தோம்.
 
எங்கள் கருத்துகளை ஏற்றுக் கொண்ட ஏ.கே.அந்தோணி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை இரு மாநிலங்களும் காக்க வேண்டும் என்று அந்தோணி தெரிவித்தார் என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger