News Update :
Powered by Blogger.

மீண்டும் ஷங்கர்-ரஜினி

Penulis : karthik on Tuesday, 6 December 2011 | 09:17

Tuesday, 6 December 2011

 
 
 
நமது வாசகர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் நியூஸ் இது. மறுபடியும் ஒன்று சேர்ந்து ஒரு மெகா ஹிட்டுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும். 'நண்பன்' படத்தில் மூழ்கியிருந்த ஷங்கர் கடந்த சில வாரங்களாக முழுக்க முழுக்க இந்த ரஜினி படத்திற்காக நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார். இதையடுத்து ஏராளமான கேள்விகள் எழுந்திருக்கிறது கோடம்பாக்கத்தில்.
 
அப்படியென்றால் ராணா என்னவாகும் என்பதுதான் முதல் கேள்வி. கோச்சடையான் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நேரடியாக ஷங்கர் படத்திற்குதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான் படத்தில் கூட ரஜினி சில காட்சிகளில்தான் தோன்றப் போவதாகவும் தகவல். அதாவது இவரே கோச்சடையான் கெட்டப்பில் தோன்றி தனது கதையை கூற ஆரம்பிப்பாராம். சில வார்த்தைகளில் இவர் கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அனிமேஷன் உருவத்திற்கு தாவ ஆரம்பித்துவிடும் காட்சிகள். இப்படி இடையிடையே ரஜினி தோன்றி தோன்றி முழு கதையையும் நகர்த்திச் செல்வதாக திட்டமாம்.
 
அதுமட்டுமல்ல, இந்த கோச்சடையானுக்காக ரஜினி அதிகபட்சமாக பத்தே நாட்கள்தான் ஒதுக்கப் போகிறாராம். இப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் ரஜினி என்கிறது சில தகவல்கள்.
 
இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கிறார். அவரிடமும் பேசி கதை சுருக்கத்தை சொல்லியிருக்கிறாராம் ஷங்கர்.
 
அப்படியென்றால் கே.எஸ்.ரவிகுமார்? ராணா வரும் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை வந்தால், ரவிகுமார் இருப்பார் அதில்.



comments | | Read More...

சூடு பிடித்த எந்திரன் கதைத் திருட்டு வழக்கு! சிக்கலில் கலாநிதி மாறன்!

 
 
 
எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விறுவிறுப்பான திருப்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன? முதலில் வழக்கின் விபரத்தைப் பார்ப்போம்.
 
நக்கீரன் குழும வெளியீடான 'இனிய உதயம்' இலக்கிய பத்திரிகையில் 96ல் வெளியான ஜூகிபா என்கிற ரொபாட் தொடர்பான தனது கதையை அப்பட்டமாகத் திருடி ரஜினியின் 'எந்திரன்' படம் எடுக்கப்பட்டிருக்கிறது என புகார்க் குரல் கொடுத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரனிடம் எந்திரன் படத்தயாரிப்பாளர் சன் டி.வி.கலாநிதி மாறன் மீதும் படத்தின் இயக்குநர் சங்கர் மீதும் குற்றவியல் புகாரைக் கொடுத்தார்.
 
ஜூகிபா கதையையும் எந்திரன் படத்தையும் ஒப்பிட்டுப்பார்த்த காவல்துறை அதிகாரிகள், புகாரில் நம்பகத்தன்மை இருக்கிறது என்று தெரிவித்ததோடு ஆளும்கட்சியின் செல்வாக்குள்ள கலாநிதி மாறன் பெயரை மட்டும் புகாரில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று வலியுறுத்தினர். இதை தமிழ்நாடனும் அவரது வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொள்ளாததால் புகாரை ஏற்கமறுத்துவிட்டது அன்றைய காவல்துறை.
 
 
இதைத் தொடர்ந்து கதைத் திருட்டு மூலம் மோசடி செய்ததாகவும் இந்திய பதிப்புரிமை சட்டத்திற்கு முரணாக நடந்துகொண்டதாகவும் கலாநிதி மாறன், சங்கர் ஆகியோர் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, இவர்களிடம் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கையும் தமிழ்நாடன் தரப்பு தொடர்ந்தது.
 
 
தமிழ்நாடன் சார்பாக சீனியர் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் மற்றும் எட்விக், சிவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். சாட்சிகளை விசாரித்து, ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகு எழும்பூர் 13வது நீதிமன்றம் கலாநிதி மாறனையும் சங்கரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிரடியாக சம்மனைப் பிறப்பித்தது.
 
 
இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய கலாநிதி மாறனும் சங்கரும், கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க இடைக்காலத் தடையை வாங்கினர்.
 
 
இந்த நிலையில் இவர்களது தடையை நீக்கும்படி தமிழ்நாடனின் வழக்கறிஞர்களான பி.டி.பெருமாள், எட்விக், சிவகுமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கலாநிதி மாறன் சார்பாக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ்.ராமன் ஆஜரானார். வழக்கை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்தார்.
 
 
அப்போது கலாநிதி தரப்பு, கால அவகாசம் கேட்க, நீதியரசரோ இதற்கு மேல் கால நீட்டிப்பு தரமுடியாது என்றபடி ஒரு வார காலம் மட்டும் அவகாசம் கொடுத்து வழக்கை டிசம்பர் 9ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். அன்று விசாரணை தொடங்குகிறது.
 
 
வழக்கு எப்படி போகும் என்பதைத் தீர்மானிக்கும் நாள் அது என்பதால், இருதரப்பும் அந்த நாளை பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
 
 
இணையதள நேயர்களான நாமும் பலத்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.



comments | | Read More...

‌கொலைவெறி பாடல் உருவான விதம்! வெளிவராத சுவாரஸ்யமான தகவல்கள்!!

 
 
தனுஷ் நடிப்பில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதரித்து இருக்கும் படம் 3. தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில், சில வாரத்திற்கு முன்னர் இப்படத்தில் இருந்து சிங்கள் டிராக் ஆடியோவை ரிலீஸ் செய்தனர். வொய் திஸ் கொலைவெறி, கொலைவெறி... என ஆரம்பிக்கும் இப்பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் தனுஷே எழுதி பாடியிருக்கிறார்.
 
ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தபாடலை கேட்டு ரசித்துள்ளனர். மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் இந்த பாடல் ரொம்பவே கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கான பேர் விரும்பி, ரசித்து பார்த்த கொலைவெறி பாடலுக்கு பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அது என்னவென்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே கூறியுள்ளார். இதோ...
 
21வயது நிரம்பிய அனிருத்தின் கனவு, ஏக்கம் எல்லாமே இசை தானாம். சென்னை லயோலா கல்லூரியில் இந்தாண்டு தான் பி.காம் முடித்துள்ளார். இந்த இளம்வயதில் எப்படி உங்களுக்குள் இசை, ஆர்வமும், ரசிகர்களின் ரசனையும் புரிந்தது என்று கேட்டால், சிறு வயது முதலே எனக்கு இசை ஆர்வம் அதிகம். சந்தியா என்ற டீச்சரிடம் வெஸ்டன் மியூசிக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து பியானோ உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகளையும் கற்றுக்கொண்டேன். படித்து கொண்டு இருக்கும்போதே பல விளம்பர படங்களுக்கு இசை சேர்ப்பு செய்திருக்கிறேன். இது எனக்குள் உள்ள இசை ஆர்வத்தை மேலும் தூண்டியது.
 
சரி, ஐஸ்வர்யா தனுஷின் முதல்படமான 3 படத்தில் எப்படி உங்களுக்கு வாய்ப்பு வந்தது என்று கேட்டால், நான், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மூவருமே நன்கு அறிமுகமானவர்கள் தான். அவர்களுடன் நிறைய குறும்படங்களில் வேலை பார்த்துள்ளேன். அதன் அடிப்படையில் என்னை இந்தபடத்திற்கு இசையமைக்க தேர்வு செய்தனர். அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எங்க மூவரின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஜாலியான மூடில் தான் எப்பவும் ‌ஒர்க் பண்ணுவோம் என்றவரிடம், கொலைவெறி பாட்டு எப்படி கம்போஸ் பண்ணினுங்கே, தனுஷ் எப்படி டியூன் கேட்டு பாடல் வரிகள் எழுதி பாடினார் என்று கேட்டதற்கு, சொன்னா நம்பமாட்டிங்க சும்மா மியூசிக் கம்போஸ் பண்ணிகிட்டு இருந்தேன். அப்போ தனுஷ் திடீர்னு மைக் முன்னாடி வந்து நின்று பாடல் வரி கூட எதுவும் எழுதாமல் மியூசிக் கேட்டு பாட ஆரம்பச்சுட்டாரு. எல்லாமே தனுஷ் போட்ட வரிகள் தான். அதில் தமிழ், ஆங்கிலம் மிக்ஸ் பண்ணி எழுதி, பாடி இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் இந்தபாட்டு ரொம்ப பிடிச்சுபோக இந்தபாட்டை உருவாக்கினோம். ஆனா அப்போ எங்களுக்கு தெரியாது. இந்தபாட்டு இவ்வளோ பெரிய ஹிட்டாகும் என்று. இளைஞர்கள் விரும்பி கேட்பாங்கனு நினைச்சோம். ஆனா எல்லா வயசுக்காறங்களும் இந்தபாட்டு ரசிக்கிறாங்க. தமிழ்நாட்டுல மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தபாடல் ஹிட்டாகியுள்ளது. இதனால் எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம் என்றார்.
 
3 படத்தில் மொத்தம் 10 பாட்டு இருக்காம். அதில் ஒரு பாடல் ரீ-மிக்ஸ் பாடலாம். முதல்முறையாக தனுஷ், ஸ்ருதியுடன் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு பாடியிருக்கிறாரம். இதுதவிர கிளப் சாங்கை அனிருத்தும், மற்றொரு பாடலை முன்னணி பிரபல பாடகர்களும் பாடியிருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற இருவருக்கு இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம். இளம் நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர்கள் என படம்முழுக்க மொத்தமும் சிறு வயது ஆட்‌களே.
 
முதல்படத்தின் பாடல்களே வெளிவராத நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருப்பது அனிருத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரைத்தேடி பாலிவுட் அழைப்புகளும் வந்துள்ளன. பாலிவுட்டின் பெரிய சினிமா கம்பெனிகள் இரண்டு தங்களின் படத்திற்கு இசையமைக்க இவரை அணுகியுள்ளது. ஆனால் இப்போது 3 படத்தில் அனிருத் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.
 
கொலைவெறியின் வெற்றி, அனிருத்துக்கு உலக அளவில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!!



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger