News Update :
Powered by Blogger.

சிம்பிளா பதிவுத் திருமணம்! டாப்ஸி அதிரடி முடிவு!!

Penulis : karthik on Tuesday, 15 November 2011 | 23:22

Tuesday, 15 November 2011

 
 
 
ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. சிம்பிளா பதிவுத் திருமணம் செய்து கொள்ளவே நான் விரும்புகிறேன் என்று நடிகை டாப்ஸி கூறியிருக்கிறார். ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில் நடித்த டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
இதுகுறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், "திருமணம் செய்து கொள்வது அப்படியொன்றும் தவறான விஷயமில்லையே. எல்லோருக்கும் இனிமையான ஒன்று. ஒவ்வொருவரும் தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்ப்பது உண்டு. ஆனால் நான் அப்படி யோசிக்கும் நிலையில் இல்லை. இப்போதைக்கு என் திருமணம் நடக்காது. ஆனால் எனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்துள்ளேன். அவர் என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் புரிந்து செயல்பட வேண்டும். சினிமாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதை எதிர்ப்பவராக இருக்கக் கூடாது. திருமணங்கள் ஆடம்பரமாக நடப்பதும் எனக்குப் பிடிக்காது. மணப்பெண்ணுக்கு உடம்பு நிறைய நகைகள் போட்டு பட்டுச்சேலை உடுத்தி மணமேடையில் பல மணி நேரம் உட்கார வைக்கிறார்கள். திருமண மண்டபங்களில் நிறைய கூட்டத்தை அழைத்து வைத்து முகூர்த்தத்தை நடத்துகின்றனர். மணப்பெண் அவ்வளவு நேரம் எப்படித்தான் பொறுமையாக இருக்கிறாளோ புரியவில்லை. என்னை பொறுத்தவரை சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.



comments | | Read More...

இன்றைய முக்கிய செய்திகள்

 
தி.மு.க எம்.பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். DMK MP arrested in land grabbing case  தி.மு.க எம்.பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில அபகரிப்பு புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் போலீசார்

இன்று பதவி ஏற்கிறார் ஞானதேசிகன்  இன்று பதவி ஏற்கிறார் ஞானதேசிகன்
தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் ஞானதேசிகன் இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். தமிழக காங்கிரஸ்

 கூடங்குளம்-2-ம் கட்ட ஆய்வு தொடங்கியது
கூடங்குளம் அணுஉலை குறித்த‌ மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்
 உ.பி.யை 4 மாநிலங்களாகப் பிரிக்க மாயாவதி கோரிக்கை
உத்திரபிரதேசத்தை நான்கு மாநிலங்களாக பிரிக்க முதலமைச்சர் மாயாவதி முடிவு செய்துள்ளார்.
 அக்னி - 4 சோதனை வெற்றி
அணு குண்டுகளை 3 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சுமந்து சென்று தாக்கும்
 புற்றுநோய்க்கு புதிய மருந்து
லட்சக்கணக்கான மனிதர்களுக்கு எமனாக இருப்பது புற்றுநோய் தான். இந்த நோய்க்கு அமெரிக்க விஞ்ஞானிகள்
 இந்தியாவுக்கு யுரேனியம் தர ஆஸ்திரேலியா முடிவு
இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை
 தினம் 5 பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்த கடாபி
லிபியா அதிபர் கடாபி செக்ஸ் வெறியராக இருந்தார். அவர் ஆட்சியில் இருந்தபோது தினம்
 `சென்செக்ஸ்' 236 புள்ளிகள் வீழ்ச்சி
நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து நான்காவது தினமாக செவ்வாய்க்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது.
 பெட்ரோல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை 2 ரூபாய் 35 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
 தங்கம் விலை மீண்டும் சரிவு
தங்கம் விலை மீண்டும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு
 டிக்ளெர் செய்தது இந்தியா
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
 இந்திய பந்துவீச்சில் சிதறியது மேற்க்கு இந்தியத் தீவுகள்
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
 ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது
பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு, மும்பை செவன்

     

www.tamilkurinji.com

comments | | Read More...

அன்னக்கொடியும் கொடிவீரனும்: அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்

 
 
 
மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய கனவு படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் ஹீரோவாக முதலில் பார்த்திபன் தான் நடிக்க இருந்தார். ஆனால், ஏனோ சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைரக்டர் அமீர் நடிக்க இருக்கிறார். கூடவே மற்றொரு ஹீரோவாக பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரின் மகன் அச்சன் நடிக்க இருக்கிறார். நாயகிகளாக வாகைசூட வா இனியாவும், கோ கார்த்திகாவும் நடிக்கின்றனர். இதில் இனியா, அமீருக்கு ஜோடியாகவும், கார்த்திகா புதுமுகம் அச்சனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளனர்.
 
பொதுவாக பாரதிராஜா அந்தகாலத்திலிருந்தே தன்னுடைய படத்தின் அறிமுக ஹீரோ, ஹீரோயின்களின் பெயரை சினிமாவிற்காக மாற்றுவார். அதுபோல் இந்தபடத்திலும் அறிமுகமாக இருக்கும் புதுமுகம் அச்சனின் பெயரையும் மாற்ற உள்ளாராம். இதனிடையே அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் சூட்டிங் வருகிற 17ம் தேதி அதாவது நாளை வியாழக்கிழமை, தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. படத்தின் துவக்க விழாவுக்கு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் உள்ளிட்ட டைரக்டர் பங்கேற்க இருக்கின்றனர்



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger