News Update :
Powered by Blogger.

300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்! (காணொளி இணைப்பு)

Penulis : karthik on Tuesday, 18 October 2011 | 18:51

Tuesday, 18 October 2011

 

விமானம் விமான நிலையத்தை அடையும் போதுதான் அதன் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார்.

அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வரவில்லை. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினால் அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியது.

ஆனால் தொடர்ந்து பறக்க எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் எரிபொருள் மீதியாக அதிகம் இருந்தால் அது விமானம் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானால் எரிவதற்கு பெரிதும் உதவும்.

இதனால் எரிபொருள் காலியாகும் வரை வானில் சுற்றியது விமானம். இதற்கிடையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒரு திட்டத்தைப் போட்டது. அதுதான் இறுதியில் கைகொடுத்துள்ளது.

அதாவது விமானம் தரையிறங்கும்போது அதன் முன் சக்கரங்கள் தரையில் முட்டாதவண்ணம் அதனை தாங்கிப் பிடிக்க ஒரு டிரக் வண்டியை அவர்கள் பாவிக்க திட்டம் தீட்டினர்.

ஆனால் அந்த டிரக் வண்டியை ஓட்டுபவர் சற்றும் பிசகாமல் அதனைச் செய்ய வேண்டும். சற்று ஆட்டம் கண்டாலும் விமானம் பாதை மாற வாய்ப்புகள் உண்டு.

அத்தோடு விமானம் தரையிறங்கும்போது அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும்.

நிசான் டிரக் வாகனம் ஒன்றைப் பாவித்தே இவர் இந்த விமானத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். எல்லோரும் இவரை ஒரு ஹீரோ என்று பாராட்டினார்கள்.

பல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க வரிசை கட்டி நின்றது. ஆனால் அவர் எதற்கும் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டாராம்.தன்னை ஒரு ஹீரோ நான் நினைக்கவில்லை என்று கூறிய அவர் இது தனது கடமை என்று சொல்லியுள்ளார்.

பிறர் செய்யும் காரியங்களையே தாம் செய்வதாகச் சொல்லித் திரியும் மனிதர்கள் மற்றும் TV வானொலிகளில் பேச அலைந்து திரியும் மனிதர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர். உண்மையானவர்.

comments | | Read More...

வயிறு குலுங்க சிரிப்பீங்க பார்காதவங்க பாருங்க!(வீடியோ இணைப்பு)

 

ஒர்மி எனும் பன்றிக்குட்டி செய்யும் அட்டகாசம் தான் குழந்தைகளுக்கான அனிமேஷன் குறும்படங்களில் இப்போது இதுவரை இந்த ஒர்மி அனிமேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக…! ஸ்ப்ரோகெட்ஸ் 2010, நியூயோர்க் சிறுவர் திரைப்படங்களுக்கான விழா

2011 என அனைத்திலும் விருதுகளை அள்ளிக்குவித்தது இக்குறும் படம். இதன் பேஸ்புக் பேன் பேஜ்ஜும் பிரபலம். இதுவரை இந்த ஒர்மி அனிமேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக! இல்லை இல்லை, உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக…

comments | | Read More...

தோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்களால் ஹரியானாவில் பரபரப்பு


தோழி ஒருவரை பழிவாங்க, அவரை நிர்வாணமாக படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அவரது 4 தோழிகள். ஹரியானா மாநிலம், பஞ்சகுலா மாவட்டத்தில் ஒரு பெண்கள் விடுதி உள்ளது.

தனியாருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஒரு அறையில் 2 முதல் 4 பெண்கள் தங்கி உள்ளனர்.

கடந்த மாதம் இங்கு தங்கியிருந்த சில பெண்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி, ஒருதரப்பை சேர்ந்த 4 பெண்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடத்தி சென்றனர்.

காரில் காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். முடிவாக அப்பெண்ணின் ஆடைகளை களைய செய்து, அவரது மொபைல் போனில் படம் பிடித்தனர். பல செக்ஸ் சில்மிஷங்களை செய்து கொடுமைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை எம்.எம்.எஸ். மெசேஜாக மாற்றினர்.

நிர்வாணமாக்கப்பட்ட அந்த பெண்ணின் மொபைல் போனில் இருந்த சேமிக்கப்பட்ட மற்ற எண்களுக்கு அந்த வீடியோவை, எம்.எம்.எஸ்சாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிய கூட இல்லை.

பலருக்கு அனுப்பப்பட்ட இந்த வீடியோ தற்போது ஹரியானா மாநிலம் முழுவதும் பரவி உள்ளது. இந்த சம்பவத்தினால் பெரும் அவமானம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தேசிய பெண்கள் அமைப்புகளின் உதவியை நாடியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு தேசிய பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை குறித்து வழக்கு தொடுத்துள்ள வழக்கறிஞர் பங்கச் சாண்கோதீயா என்பவர் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதியாமல் விட்டுள்ளனர்.

ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி படம் எடுத்து, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் சைபர் கிரைம் குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலங்களில் இதுபோன்ற சைபர் குற்றங்கள் அதிகரிக்கும், என்றார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger