News Update :
Powered by Blogger.

விஜய் அப்பாவிடம் படுத்தோல்வி அடைந்த பவர் ஸ்டார்

Penulis : karthik on Monday, 10 October 2011 | 02:25

Monday, 10 October 2011

 
 
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேயார் 24 வாக்குகள் வித்தியாசத்திலும், பவர் ஸ்டார் சீனிவாசன் படு தோல்வியும் அடைந்தனர்.
 
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஜாம்பவான்களான எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டியிட்டனர். இவர்களுடன் டாக்டர் கே.சீனிவாசன் என்பவரும் போட்டியில் குதித்தார். இதனால் திரையுலக தயாரிப்பாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
'பவர் ஸ்டார்' என்ற அடை மொழியுடன் தமிழ்த் திரையுலகில் நடமாடி வரும் சீனிவாசன், லத்திகா என்ற 'பிரமாண்ட வெற்றிப் படத்தை' எடுத்து, ஹீரோவாகவும் நடித்தவர். இவரும் போட்டியில் குதித்ததால் போட்டி களை கட்டியது.
 
நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை நடந்த விறுவிறுப்பான வாக்குப் பதிவில் கலந்து கொண்டு பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகையர் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 68 சதவீத வாக்குகள் வரை பதிவாகின.
 
பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் அதிகாரியாக இப்ராகிம் ராவுத்தர் செயல்பட்டார்.
 
மொத்த ஓட்டுக்களில் பதிவான 641 ஓட்டுக்களில் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு 324 வாக்குகள் கிடைத்தன. கேயாருக்கு 300 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் 24 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
50 ஓட்டுக்களைக் கூட முழுமையாக பெற முடியாமல் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு 'பவர் ஸ்டார்' சீனிவாசன் படு தோல்வியைச் சந்தித்தார்.
 
பொருளாளர் பதவிக்கு எஸ்.ஏ.சி அணியைச் சேர்ந்த கலைப்புலி தாணு தேர்வு பெற்றார். இவருக்கு 349 வாக்குகளும், அன்பாலயா பிரபாகரனுக்கு 256 வாக்குகளும் கிடைத்தன.
 
வெற்றிக்குப் பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அரசியல் கட்சித் தேர்தல் அல்ல. சங்கத் தேர்தல். இங்குவெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களுடன் இணைந்து செயல்பட்டு, நல்லது நடக்க பாடுபடுவோம் என்றார்.



comments | | Read More...

முழங்காவிலில் திருடப்பட்ட பிள்ளையார் விக்கிரகம் யாழில் சிக்கியது! இருவருக்கு விளக்கமறியல்!

 

ஐம்பொன்னிலான பிள்ளையார் விக்கிரகத்தை திருடிக் கொண்டு சென்ற சந்தேக நபர்கள் இருவரை யாழ். குற்றத் தடுப்புப் பொலிஸார் யாழ். முத்திரைச் சந்தைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். சுதுமலையைச் சேர்ந்த முத்துராசா நந்தன், சாவற்கட்டைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ஜேசுரட்ணம் ஆகியோரே பிடிபட்ட சந்கேநபர்களாவர். சாக்குப்பை ஒன்றில் விக்கிரகத்தைச் சுற்றி மறைத்து சைக்கிளில் எடுத்துச் சென்ற போதே அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

முழங்காவில் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலிருந்து இந்த விக்கிரகம் திருடப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை சந்தேக நபர்கள் இருவரும் யாழ். மேலதிக நீதிவான் அ.பிறேமசங்கர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றின் உத்தரவின் பேரில் பிள்ளையார் விக்கிரகம் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

comments | | Read More...

விஜய்யை வளர்க்க வீட்டை விற்றேன்...எஸ்.ஏ.சி ஆவேசம்

 
 
 
களைகட்டி வரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை அறிய இன்னும் ஒரே ஒரு நாள் காத்திருந்தால் போதும். அதற்குள் யார் சட்டையும் கிழியாமலிருக்க ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை. இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் சுமத்திக் கொள்ளும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆக்ரோஷத்திற்கும் அளவே இல்லை. எல்லா தயாரிப்பாளர்களுக்கும் அரை கிரவுண்ட் நிலம் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் எஸ்..சி.
 
இது குறித்து கருத்து தெரிவிக்கும் கேயார், அப்படி கொடுத்தால் சுமார் 25 கோடியாவது தேவைப்படும். சங்கத்தில் இருப்பது ஒரு கோடிதான். மீதமுள்ள பணத்திற்கு விஜய் மூன்று படங்களுக்கு சம்பளம் வாங்காமல் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கால்ஷீட் கொடுத்தால்தான் முடியும் என்கிறார்.
 
அடிக்கடி விஜய்யையும் இந்த விஷயத்தில் இழுப்பதால் பெரும் கோபத்திற்கு உள்ளாகியிருக்கும் எஸ்..சி நறுக்கென்று ஒரு பதிலையும் சொல்கிறார்.
 
விஜய் விஜய்ன்னு சொல்றாங்க. அவரை நான் ஒண்ணும் சும்மா சாதாரணமாக சினிமாவுக்குள் கொண்டு வந்து விடல. எத்தனை நிலத்தை விற்றிருப்பேன், எத்தனை வீடுகளை விற்றிருப்பேன் என்று எனக்குதான் தெரியும். நான் தேர்தலில் நிற்கிறேன்னா என்னை பற்றி மட்டும்தான் பேச வேண்டும்.
 
விஜய் இப்போதான் சினிமாவுக்கு வந்தார். நான் முப்பந்தைந்து வருஷமா சினிமாவில் இருக்கேன். எந்த விநியோகஸ்தரையும் ஏமாற்றியதில்லை. எந்த டெக்னிஷியனுக்கும் சம்பள பாக்கி வைத்ததில்லை. இந்த தேர்தலில் தகுதியோடதான் நிற்கிறேன். நேரடியாக என்னுடன் மோதுவதை விட்டுட்டு என் மகன் விஜய்யை இதில் இழுப்பது கொஞ்சம் கூட சரியில்லை என்றார் ஆவேசமாக.
 
இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த எஸ்..சி தனது தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். திருச்சி இடைத் தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் அதிமுக வின் வெற்றிக்கு பாடு பட வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger