News Update :
Powered by Blogger.

தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேலாயுதம்!

Penulis : karthik on Wednesday, 28 September 2011 | 09:27

Wednesday, 28 September 2011

 
 
விஜய் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கியுள்ள வேலாயுதம் படம் வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அய்ங்கரன் நிறுவனம் வெளிநாடுகளில் வெளியிடுகிறது. தமிழகத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
 
வெளிநாடுகளில் மட்டும் 400 திரையரங்குகள் வரை இந்தப் படத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளன. இந்த தியேட்டர்கள் விவரங்களையும் அய்ங்கரன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஹீரோயின்களாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.
 
ரஜினியின் எந்திரனைப் போல பெரிய ஓபனிங் வேண்டும் என்பதற்காக தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். அதேபோல தமிழகத்தில் 1000 அரங்குகள் வரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.



comments | | Read More...

நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-'பேய்' என மக்கள் பீதி!

 
 
 
 
 
 
சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.
 
நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
 
மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
 
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.
 
10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.
 
ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர்.
 
இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது.
 
அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



comments | | Read More...

ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000 கோடி என சொன்னது ஏன்?

 
 
 
 
 
 
2007ம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2,645 கோடி மட்டுமே என்று இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்தைச் (Comptroller and Auditor General -CAG) சேர்ந்த மூத்த ஆடிட்டர் ஒருவர் கணக்கிட்டுள்ளார்.
 
ஆனால், அதை புறம் தள்ளிவிட்டு, நஷ்டம் ரூ. 1.76,000 கோடி என்று அறிக்கை தந்துள்ளால் தலைமைத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.
 
இது தொடர்பாக தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக தணிக்கைத்துறையின் (தபால் மற்றும் தொலைத் தொடர்புப் பிரிவு) ஆடிட்டர் ஜெனரலான ஆர்.பி.சிங் தான் மதிப்பீடு செய்துள்ளார். அவர் தனது மதிப்பீட்டின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் ரூ. 2,645 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை சமர்பித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் இந்த அறிக்கையை சிங் தயாரித்துள்ளார். இதில் நாட்டின் பண வீக்கத்தையும் மனதில் கொண்டு, நஷ்டத்தை மதிப்பீடு செய்தார் சிங்.
 
ஆனால், அவரது அறிக்கையை நிராகரித்துவிட்டு நாட்டுக்கு ரூ. 1,76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தலைமைத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய் தானாகவே தகவல் வெளியிட்டுள்ளார்.
 
இதன்மூலம் ராய், ஸ்பெக்ட்ரம் நஷ்டக் கணக்கை மிகவும் உயர்த்தி தவறான தகவல் தந்த விவரம் இப்போது வெளியாகிவிட்டது. இவர் எந்தக் கணக்கை வைத்து நஷ்டத்தை இவ்வளவு தூரம் அதிகரித்துச் சொன்னார் என்பது தெரியவில்லை என்று ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.
 
இது குறித்து தலைமைத் தணிக்கை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் முடிவு செய்துள்ளது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger