News Update :
Powered by Blogger.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: தாம்பரத்தில் ரெயில் மறியல் பள்ளி மாணவர்கள் கைது commonwealth conference india participate oppose tambaram train siege student arrested

Penulis : Tamil on Monday, 4 November 2013 | 02:38

Monday, 4 November 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: தாம்பரத்தில் ரெயில் மறியல் பள்ளி மாணவர்கள் கைது commonwealth conference india participate oppose tambaram train siege student arrested

சென்னை, நவ 4–

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது. தாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் இருந்து பிரசாரம் செய்தபடி தஞ்சை செல்ல முடிவு செய்தனர். இதனை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைப்பதாக இருந்தது.

இதற்காக சேப்பாக்கத்தில் மாணவர் கூட்டமைப்பினர் கார்த்திக் தலைமையில் திரண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.

இதில் பங்கேற்ற ராஜீவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் கைது செய்யப்பட்டார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளி மாணவர்கள் 30 பேர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவு நிகழ்ச்சி தொகுப்பாளர் இசைப்பிரியா மிக கொடூரமான முறையில் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர காட்சியை சேனல்–4 தொலைக்காட்சி வெளியிட்டது. இது அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாறில் இன்று திடீர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

ஆனாலும் தடையை மீறி தென்சென்னை மாவட்ட தலைவர் வேல்ராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கட்சி நிர்வாகிகள் குமார், பழனி உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

...

shared via

comments | | Read More...

காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்டதால் செக்ஸ் புகாரை திரும்பப் பெற்றார் நடிகை சுவேதா மேனன் Swetha Menon withdraws molestation complaint

Penulis : Tamil on Sunday, 3 November 2013 | 16:33

Sunday, 3 November 2013

காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்டதால் செக்ஸ் புகாரை திரும்பப் பெற்றார் நடிகை சுவேதா மேனன் Swetha Menon withdraws molestation complaint

திருவனந்தபுரம், நவ.4-

நடிகை சுவேதா மேனன், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. பீதாம்பர குரூப் மீது செக்ஸ் புகார் கூறினார். இதனைத்தொடர்ந்து கொல்லம் போலீசார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை சுவேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது கொல்லம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பீதாம்பர குரூப்(71) தன்னிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சுவேதா மேனன் பரபரப்பு புகார் கூறினார்.

இதுபற்றி சுவேதா மேனன் கூறுகையில், விழாவில் கலந்து கொண்ட என்னிடம் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி அத்துமீறி நடந்து கொண்டார். என்னை தொட்டு தொட்டு பேசினார். அதை நான் தவிர்க்க முயன்றபோதும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி என் நிம்மதியை கெடுத்து விட்டார் என்றார்.

மேலும் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்த அரசியல்வாதி பற்றி தான் கொல்லம் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனக்கு வேதனை அளிப்பதாகவும் சுவேதா மேனன் கூறினார். நடிகை சுவேதா மேனனுக்கு நடந்த செக்ஸ் டார்ச்சர் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாக மலையாள திரைப்பட துறையினரும் பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தினார்.

இதனைத்தொடர்ந்து நடிகை சுவேதா மேனனின் செக்ஸ் புகார் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் கொல்லம் உயர்அதிகாரிகளுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, கொல்லம் எம்.பி. பீதாம்பர குரூப் மீது கொல்லம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு பீதாம்பர குரூப் தன்னிடம் தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் மன்னிப்பு கேட்டதால் போலீசாரிடம் அளித்த புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாக சுவேதா மேனன் இ-மெயில் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த முடிவு எனது குரு, தந்தை மற்றும் கணவர் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர் எடுக்கப்பட்டது. எனது மனமாற்றத்தின் பின்னணியில் வேறெந்த நிர்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

...

shared via

comments | | Read More...

பாட்னா குண்டுவெடிப்பு: டெல்லி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதி பிடிபட்டான் patna bomb blast terrorist arrested delhi airport

Penulis : Tamil on Thursday, 31 October 2013 | 03:30

Thursday, 31 October 2013

பாட்னா குண்டுவெடிப்பு: டெல்லி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதி பிடிபட்டான் patna bomb blast terrorist arrested delhi airport

பாட்னா, அக். 31–

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியானார்கள். 82 பேர் காயம் அடைந்தனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசார கூட்டத்தை சீர்குலைக்க இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்தி இருப்பது தெரியவந்தது.

தெக்சீன் அக்தர் என்ற தீவிரவாதி உத்தரவின் பேரில் நடந்த இந்த நாசவேலையில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. குண்டு வெடிப்பு நடந்த உடனே இம்தியாஸ் அன்சாரி, தவ்சீம், தாரிக் அன்சாரி ஆகிய 3 பேர் பிடிப்பட்டனர்.

இதில் அன்சாரி குண்டு காயம் காரணமாக உயிரிழந்தான். இதற்கிடையே இம்தி யாஸ் கொடுத்த தகவலின் பேரில் 4–வது குற்றவாளி உஜ்ஜர் அகமது நேற்று கைது செய்யப்பட்டான்.

இந்த நிலையில் இன்று டெல்லி விமான நிலையத்தில் முகம்மது அப்சல் என்பவனை போலீசார் கைது செய்தனர். இவன் நேற்று கைதான உஜ்ஜர் அகமதுவின் உறவினர் ஆவார்.

விமான நிலையத்தில் தன் மனைவியை பார்க்க வந்த போது முகம்மது அப்சல் சிக்கியது தெரிய வந்துள்ளது. இவனுக்கும் பாட்னா குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

முகம்மது அப்சலை தேசிய விசாரணைக் குழுவினர் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். முகம்மது அப்சல் பிடிபட்டதன் மூலம் பாட்னா நாசவேலை தொடர்பாக சிக்கி இருக்கும் தீவிரவாதிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

முக்கிய குற்றவாளியான தெசீன் அக்தரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

...

shared via

comments | | Read More...

ரஜினி பொண்ணை நான் தேடிப்போகல - தனுஷ் dhanush

Penulis : Tamil on Wednesday, 30 October 2013 | 22:23

Wednesday, 30 October 2013

ரஜினி பொண்ணை நான் தேடிப்போகல; அதுவாத்தான் வந்தது’ : பரபரப்பை கிளப்பிய தனுஷ் !

dhanushஇந்த பீடிக்கு அந்த லேடி கேட்குதா” என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தவர் நடிகர் தனுஷ்:
அப்படிப்பட்ட தனுஷ் தான் சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் “நான் நல்ல புருஷன் இல்லை, ஆனால் என் குழந்தைக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க முயற்சிக்கிறேன்” என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.
comments | | Read More...

தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது: மு.க.ஸ்டாலின் பேட்டி Stalin says Thevar festival celebrated DMK rule

தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது: மு.க.ஸ்டாலின் பேட்டி Stalin says Thevar festival celebrated DMK rule

கமுதி, அக்.30–

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற்றது. தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12.25 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–

பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் அனைத்து சமூக மக்களால் போற்றப்பட கூடியவர். தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்லூரிகளுக்கு பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்டி பெருமை சேர்த்தோம்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பசும்பொன்னில் அனையா விளக்கு அமைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவர் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தேவையற்றது. தேர்தலுக்காக இங்கு நாங்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

comments | | Read More...

திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமியும் அதிமுகவில் இணைந்தனர் DMK former minister nirmala periasamy fathima babu join ADMK

Penulis : Tamil on Monday, 28 October 2013 | 21:44

Monday, 28 October 2013

திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமியும் அதிமுகவில் இணைந்தனர் DMK former minister nirmala periasamy fathima babu join ADMK

சென்னை, அக். 28–

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை இன்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர். கணேசன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். அப்போது, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பரிதி. இளம்வழுதி உடன் இருந்தார்.

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி–2 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே. சௌந்தரராசன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகர மன்றத் தலைவர் ஐ.ஆபிதாசேக் தனது கணவர் ஷேக் அப்துல்காதருடன் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் உடன் இருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கா. கோவிந்தராஜ பெருமாள், நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் என். சின்னத்துரை உடன் இருந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார், கடலூர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் கடலூர் இரா. ராஜேந்திரன், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த எஸ்.கே. நரேந்திரன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

comments | | Read More...

நடிகர் சிரஞ்சீவி வெள்ள நீரில் தவறி விழுந்தார் Actor chiranjeevi falls into flood waters

நடிகர் சிரஞ்சீவி வெள்ள நீரில் தவறி விழுந்தார் Actor chiranjeevi falls into flood waters

ஐதராபாத், அக். 29-

ஆந்திராவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 53 பேர் பலியாகினர்.

16 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வெள்ள நிவாரண பணிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகரும் மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி நேற்று கிழக்கு கோதவரி மாவட்டத்துக்கு சென்றார்.

காக்கிநாடா அருகேயுள்ள ஆஞ்சநேயா நகரை பார்வையிடுவதற்காக படகில் ஏறப்போன சிரஞ்சீவி கால் நழுவி வெள்ள நீரில் விழுந்தார். பதற்றமடைந்த அவரது பாதுகாவலர்கள் நீரில் குதித்து அவரை பாதுகாப்பாக கரையேற்றினார்கள்.

அங்கிருந்து நேராக அனபர்தி தொகுதி எம்.எல்.ஏ. சேஷா ரெட்டியின் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார்.

...

shared via

comments | | Read More...

சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்களுக்கு 300 ரியால் அபராதம் 300 Riyals fined on women for driving cars amidst ban

Penulis : Tamil on Sunday, 27 October 2013 | 20:42

Sunday, 27 October 2013

சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்களுக்கு 300 ரியால் அபராதம் 300 Riyals fined on women for driving cars amidst ban

ரியாத், அக். 28-

சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர்.

இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் பயமுறுத்தினர்.

இந்த தடை அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில்  பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை.

இந்நிலையில், இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்கள் தாங்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ள இவர்களில் பெரும்பாலான பெண்கள் மதவாதிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 6 பெண்களையும், நாட்டின் இதர பகுதிகளில் கார் ஓட்டிய மேலும் 10 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களுக்கு தலா 300 ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தனர்.

சவுதி அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என அபராதம் விதிக்கப்பட்ட பெண்களிடமும் அவர்களது தந்தை அல்லது கணவரிடமும் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

உலகிலேயே பெண்கள் கார் ஓட்டக்கூடாது என தடை செய்துள்ள ஒரே நாடு சவுதி அரேபியா தான் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

comments | | Read More...

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

பாட்னா, அக். 27-

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:-

உனது நண்பர் பாரதீய ஜனதாவை விட்டு ஏன் சென்றார் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். குரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக சீர்திருத்தவாதி ராம் மனோகர் லோஹியாவை யார் முதுகில் குத்துகிறார்களோ, அவர்கள்தான் நீண்ட கால நண்பர்களாகிய பாரதீய ஜனதாவை விட்டு எளிதில் செல்ல முடியும்.

முதல் மந்திரி நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பீகார் மக்களை காட்டிக்கொடுத்து விட்டார். இவர்கள் காங்கிரசுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1999-ம் ஆண்டு அதிகப்படியான எம்.எல்.ஏ.-க்கள் எங்களுக்கு இருந்தும் நிதிஷ்குமார் தலைமையை ஏற்க எங்களது கட்சி முதலமைச்சர் பதவியையே தியாகம் செய்தது. அப்போது நிதிஷ் குமாரின் தலைமையை பாரதீய ஜனதா ஏற்றது.

பீகார் மக்களின் நலனுக்காவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து ஐக்கிய ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா இணைந்தே செயல்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

comments | | Read More...

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 7.3 ரிக்டர் ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு 7.3 Magnitude quake rocks japan

Penulis : Tamil on Friday, 25 October 2013 | 17:34

Friday, 25 October 2013

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 7.3 ரிக்டர் ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு 7.3 Magnitude quake rocks japan

டோக்கியோ, அக். 26-

ஜப்பான் தலைநகர் டோக்கியோ இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குலுங்கியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெரும்பாலான மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் திடீரென்று அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் தூக்கக் கலக்கத்துடன் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் டோக்கியோ நகரில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹொன்ஷுவில் முழுமையாக உணரப்பட்டது. அப்பகுதியில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. ஹொன்ஷு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலோரம் உள்ள இதர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவை 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதனை தொடர்ந்து சுனாமியும் தாக்கியதில் சுமார் 19 ஆயிரம் பேர் பலியானது நினைவிருக்கலாம்.

இன்றைய நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

...

shared via

comments | | Read More...

இந்திரா காந்தி படுகொலை ஏன்? அகாலி தளம் தலைவரின் கருத்தால் சர்ச்சை Indira Gandhi why murder Akali Dal leader comment dispute

Penulis : Tamil on Thursday, 24 October 2013 | 16:39

Thursday, 24 October 2013

இந்திரா காந்தி படுகொலை ஏன்? அகாலி தளம் தலைவரின் கருத்தால் சர்ச்சை Indira Gandhi why murder Akali Dal leader comment dispute

புதுடெல்லி, அக். 24-

ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, "என் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலால் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் நானும் கொல்லப்படலாம். அதற்காக கவலைப்பட மாட்டேன்" என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க முடியாததால், ராகுல் காந்தி தனது பாட்டியின் மரணத்தை நினைவுபடுத்தி வாக்கு சேகரிக்க முயற்சிப்பதாக பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.

இந்நிலையில், இந்திரா காந்தி படுகொலையை மீண்டும் நினைவுபடுத்தி வரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பாதலின் மருமகளான ஹர்சம்ரத் இதுபற்றி கூறுகையில், "மற்றவர்களின் மகன்களையும், கணவன்களையும் கொலை செய்யும்போது இந்திரா காந்தி என்ன செய்துகொண்டிருந்தார்? சீக்கியர்கள் வழிபடும் இடத்தை (பொற்கோவில்) தகர்த்து அங்குள்ளவர்களை கொலை செய்ய உத்தரவிட்டபோது என்ன நினைத்தார்? அவருக்கு தண்டனை இல்லாமல் போகுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

"அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏன் அந்த தலைவிதி ஏற்பட்டது? என்பதற்கான காரணங்களை வெளிக்கொண்டு வர ராகுல்காந்தி கொஞ்சம் ஆழமாக சென்றிருக்கிறார். நீங்கள் செய்த செயல்களுக்கான விலையை கொடுத்துள்ளீர்கள்" என்றும் ஹர்சிம்ரத் கூறியுள்ளார்.

இந்திரா காந்தி கொலை தொடர்பாக ஹர்சிம்ரத்தின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

...

shared via

comments | | Read More...

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு Mettur dam water open for Cauvery Delta Irrigation

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு Mettur dam water open for Cauvery Delta Irrigation

மேட்டூர், அக். 24–

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மழை இல்லாததால் அங்கு பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது.

இதனால் மீண்டும் இன்று காலை 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 350 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 84.41 அடியாக உள்ளது.

...

shared via

comments | | Read More...

உ.பி. கோட்டையில் தங்க வேட்டை: மத்திய மந்திரி மீது ஐக்கிய ஜனதா தளம் போலீசில் புகார் JDU complaint against Union Min over gold hunt in UP

Penulis : Tamil on Wednesday, 23 October 2013 | 08:58

Wednesday, 23 October 2013

உ.பி. கோட்டையில் தங்க வேட்டை: மத்திய மந்திரி மீது ஐக்கிய ஜனதா தளம் போலீசில் புகார் JDU complaint against Union Min over gold hunt in UP

புதுடெல்லி, அக். 23-

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் 1000 டன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சாமியார் ஷோபம் சர்க்கார் கனவு கண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் சோனியாவிற்கும் அவர் கடிதம் எழுதினார்.

இதையடுத்து மத்திய தொல்லியல் துறை அந்த கோட்டையின் சுற்றுப்புறப்பகுதியில் தோண்டி தங்க வேட்டை நடத்தி வருகிறது. இதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தங்க வேட்டையை தொல்லியல் துறை நடத்த மத்திய விவசாய மற்றும் உணவுத்துறை இணை அமைச்சர் சரன் தாஸ் நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய ஜனதா தளம் இன்று போலீசில் புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

தங்கக்குவியல் இருப்பதாக ஒரு சாமியார் கண்ட கனவின் மீது மத்திய அமைச்சர் மகந்தா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தொல்லியல் துறையை தேடுதல் வேட்டை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அடிப்படையற்ற ஒரு கோரிக்கையை மத்திய அமைச்சர் நிராகரித்து இருக்க வேண்டும். அதைவிட்டு பொதுமக்களின் பணத்தை வீணடித்து தொல்லியல் துறை தேட நடவடிக்கை எடுத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கை நாட்டில் மேலும் மூடநம்பிக்கையை பரப்புவதாக உள்ளது. எனவே அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய மகந்த் ஒரு குற்றவாளி.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி மகந்தா மற்றும் சாமியார் சர்க்கார் சார்பாக பேசி வரும் பாபா ஓம் ஆவாஸ்தி ஆகியோர் மீது குற்றவழக்கு பதியவேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

...

shared via

comments | | Read More...

அரசியல் கட்சி தொடங்க திட்டமா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை Actor Vijay refutes floating political party

Penulis : Tamil on Tuesday, 22 October 2013 | 21:54

Tuesday, 22 October 2013

அரசியல் கட்சி தொடங்க திட்டமா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை Actor Vijay refutes floating political party

சென்னை, அக்.23-

நடிகர் விஜய் புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இதுதொடர்பாக தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிரபல தமிழ் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி விஜய்யின் தீவிர ரசிகர்களிடையே ஆனந்தத்தையும் கட்சி சார்பற்ற நிலையில் அவரது நடிப்பை மட்டுமே கண்டு ரசிக்கும் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.

இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான்.

ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.

...

shared via

comments | | Read More...

நியூயார்க்கில் போலீசாக பணியாற்றும் இந்தியருக்கு இந்திய அமெரிக்க கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழா Kerala born NYPD cop felicitated

Penulis : Tamil on Monday, 21 October 2013 | 18:34

Monday, 21 October 2013

நியூயார்க்கில் போலீசாக பணியாற்றும் இந்தியருக்கு இந்திய அமெரிக்க கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழா Kerala born NYPD cop felicitated

நியூயார்க், அக்.22-

இந்தியாவின் கேரள மாநிலம், குமிளி நகரில் பிறந்து, படித்து, வளர்ந்தவர் ஸ்டான்லி ஜார்ஜ். பெற்றோருடன் 1983ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறிய ஸ்டான்லி ஜார்ஜ் அங்குள்ள பருச் கல்லூரியில் படித்து, பட்டம் பெற்று நியூயார்க் போலீஸ் துறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார்.

பின்னர், போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான பயிற்சி கல்லூரியில் 1992ம் ஆண்டு சேர்ந்து தேர்ச்சியும் பெற்றார்.

2000-ம் ஆண்டு சார்ஜண்ட் ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் 2007-ம் ஆண்டு போலீஸ் நிலையத்திலேயே பெரிய பதவியான கேப்டன் என்ற நிலையை அடைந்தார்.

இதற்கிடையில், தீவிரவாத தடுப்பு பிரிவிலும் தனது திறமையை பலமுறை நிரூபித்துள்ள இவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியினருக்கு பல வகைகளில் உதவியும் செய்து வந்துள்ளார்.

7 ஆண்டுகளாக நியூயார்க் நகர போலீஸ் துறையில் கேப்டனாக பணியாற்றிய ஸ்டான்லி ஜார்ஜுக்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர் கூட்டமைப்பு நியூயார்க் நகரில் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது.

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இவருக்கு ஏற்கனவே நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

comments | | Read More...

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

Penulis : Tamil on Sunday, 20 October 2013 | 22:59

Sunday, 20 October 2013

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

சென்னை, அக். 21–

டெல்லி பிரதேச தே.மு. தி.க. நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் கணேஷ் தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் கணேஷ் கூறியதாவது:–

டெல்லியில் வாழும் தமிழர்களில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். ரேஷன் அட்டை வழங்க வேண்டும்.

அடிப்படைவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27–ந் தேதி ஜந்தர்மந்தரில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. அதற்காக விருப்பமனு பெறப்பட்டு வருகிறது.

இதுவரை 22 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 27–ந் தேதி டெல்லி வரும் விஜயகாந்த் வேட்பாளர்களை தேர்வு செய்கிறார். அன்றைய தினமே போட்டியிடும் வேட்பாளர் பெயரை விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு கணேஷ் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் தட்சிணா மூர்த்தி, பொருளாளர் தாணப்பன், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

27–ந் தேதி டெல்லி செல்லும் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

...

shared via

comments | | Read More...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் 3 இடங்களில் ரெயில் மறியல் 140 பேர் கைது commonwealth conference india participate oppose chennai 3 place siege 140 people arrested

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் 3 இடங்களில் ரெயில் மறியல் 140 பேர் கைது commonwealth conference india participate oppose chennai 3 place siege 140 people arrested

தாம்பரம், அக். 20–

இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத்கர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன் தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் ரெயிலை மறித்து நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

ஒருங்கிணைந்த அம்பேத்கர் மன்ற காஞ்சி மாவட்ட பொருளாளர் கோபிநாத் தலைமையில் 40 பேர் இன்று காலை 11 மணியளவில் குரோம் பேட்டையில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் 50 பேர் காலை 11.15 மணியளவில் பல்லாவரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

...

shared via

comments | | Read More...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு mettur dam water opening low

Penulis : Tamil on Saturday, 19 October 2013 | 15:56

Saturday, 19 October 2013

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு mettur dam water opening low

மேட்டூர், அக். 19–

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு நேற்று இரவு முதல் 13 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல கால்வாய் பாசனத்துக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 80.69 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 235 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

...

shared via

comments | | Read More...

விவசாயிகள் பயனடைய கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு: ஜெயலலிதா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு Broiler production wage hike to benefit farmers

Penulis : Tamil on Friday, 18 October 2013 | 22:48

Friday, 18 October 2013

விவசாயிகள் பயனடைய கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு: ஜெயலலிதா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு Broiler production wage hike to benefit farmers

சென்னை, அக் 19–

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டிலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி நிறுவன உரிமையாளர்களால் தங்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக் கூலியை உயர்த்துதல், வருடத்திற்கு ஐந்து முறை கோழிக் குஞ்சுகள் வழங்குதல், வளர்ப்புக் கூலி கணக்கிடும் முறைகளைச் சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டி தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி கடந்த 21.9.2013 அன்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்திலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் மேற்கண்ட தொழில்முறை பிரச்சனைகள் குறித்து கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் கறிக்கோழி நிறுவன உரிமையாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியிலிருந்து 15 சதவீதம் உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டுமென்றும், ஜனவரி 2014 முதல் மேலும் 5 சதவீதம் உயர்த்தி மொத்தமாக 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கறிக்கோழி பராமரிப்பில் ஏற்படும் இதர பிரச்சனைகள் மற்றும் வளர்ப்பு கூலி கணக்கிடும் முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் சுமூக தீர்வு காணப்பட்டது.

கறிக்கோழிப் பண்ணை தொழிலில் நிலவி வந்த வளர்ப்புக் கூலி மற்றும் இதர பிரச்சனைகளுக்கு 40 ஆண்டு கால கறிக்கோழி பண்ணைத் தொழில் வரலாற்றிலேயே முதன் முறையாக அரசின் நேரடி நடவடிக்கை மூலம் ஏழை எளிய கிராம விவசாயிகள் உரிய பலன் பெறும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழி காட்டுதல்கள் மற்றும் ஆணைகளின்படி கறிக்கோழி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடத்தப்பட்டு ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன் படிக்கையின்படி, கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சுமார் 14,120 கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளும் சுமார் 1,50,000 விவசாயத் தொழிலாளர்களும் உயர்த்தப்பட்ட வளர்ப்பு கூலியும் இதர பலன்களும் பெற்று பயனடைவார்கள்.

கறிக்கோழி பண்ணை தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தக்க வழிகாட்டுதலும் ஆணையும் வழங்கியமைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கறிக்கோழி நிறுவன உரிமையாளர் சங்க பிரதிநிதி ஆகியோர் சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது, நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் உள்ள பிரச்சனைகளுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மட்டும் தான் இதில் தலையிட்டு சுமூக தீர்வு கண்டுள்ளது என்று தெரிவித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் மென்மேலும் வளர்ச்சி பெற்று, எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்படைய வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னய்யா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் விஜயகுமார், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் டாக்டர் பழனிச்சாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

comments | | Read More...

உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

உன்னாவ், அக். 18-

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் தாண்டியா கிராமத்தில் உள்ள 19-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராம் பக்ஸ் சிங்கின் அரண்மனை உள்ளது. அந்த அரண்மனையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்திருப்பதாக மன்னர் ராம் பக்ஸ் சிங் தன் கனவில் வந்து கூறினார் என்று அப்பகுதி சாது சோபன் சர்க்கார் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இடத்தில் புதையல் இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்காக தொல்பொருள் துறை ஆய்வுக்குழுவை மத்திய அரசு அனுப்பியது. அந்தக் குழுவினர் இன்று அரண்மனை வளாகத்தை தோண்ட ஆரம்பித்தனர்.

இந்த பணி முடிவடைய சுமார் ஒரு மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரண்மனை வளாகத்திற்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே, தங்கப்புதையலுக்கான தோண்டும் பணி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அரண்மனை வளாகத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றில் சில தங்கம் காணாமல் போகலாம். எனவே, புதையல் தோண்டும் பணியை கோர்ட் மேற்பார்வையிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

...

shared via

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger