Saturday, 22 September 2012

மெக்சிகோவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின

மெக்சிகோவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின
மெக்சிகோவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின
மெக்சிகோசிட்டி,செப்.22-
மெக்சிகோவின் தென்பகுதியில் உள்ள சில இடங்களில் இன்று காலை நிலநடுக்கம்
ஏற்பட்டது. பினோதிபா நசியோனல் நகருக்கு வடக்கே 25 கி.மீ. தொலைவிலும்,
மெக்சிகோவில் இருந்து 340 கி.மீ. தொலைவிலும் பசிபிக் பெருங்கடலில் இந்த
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.இதனால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்5.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் 5.8 ரிக்டராக நிலநடுக்கம்
ஏற்பட்டதாக மெக்சிகோ தேசிய நில அதிர்வியல் மையம் தெரிவித்தது. இந்த
நிலநடுக்கத்தினால் ஏற்பட்டபாதிப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

No comments:

Post a Comment