ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெட்டிக்
கொலை ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை
வெட்டிக் கொலை
ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெட்டிக் கொலை
பட்டாலா,செப்.22-
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் கோட் மஜ்லிஸ் கிராமத்தில்
வசித்து வந்தவர் குமார். இவரது மகளை அதே பகுதியில் வசிக்கும் சபி என்ற
வாலிபர் தொடர்ந்து ஈவ் டீசிங் செய்து வந்தார். இதனை குமார் பலமுறை
கண்டித்துள்ளார். ஆனால் எதையும் கேட்கவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன்பு
கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போதும் சபி
தனது தொந்தரவை நிறுத்தவில்லை. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் சபி,
குமாரின் வீடு அருகே சென்று அவரது மகளுக்கு தொல்லை கொடுக்க தயாரானார்.
இதனார் ஆத்திரமடைந்த குமார், சபியை கண்டித்து அங்கிருந்து போகும்படி
எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரத்துடன் சென்ற சபி, சிறிதுநேரத்தில்
திரும்பி வந்து குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார்.
இதுபற்றி குமாரின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார்
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து
மகளை பாதுகாக்கும் முயற்சியில் தந்தைகொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment