அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த எம்.பி. பார்னி பிராங்க்.
வயது 71. பதவியை ராஜினாமா செய்ய போவதாக கடந்த ஆண்டு அறிவித் தார்.
இந்நிலையில், தனது பார்ட்னர் ஜிம் ரெடியை திருமணம் செய்து கொள்வதாக
அறிவித்துள்ளார். ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பிராங்க், தான் ஒரு
ஓரினச் சேர்க்கையாளர் என்று பகிரங்கமாகவே அறிவித்தவர்.
மாசாசூசெட்சில் நடக்கும் விழாவில், ஜிம்மை திருமணம் செய்ய போகி றார்
பிராங்க் என்று அவரது செய்தித் தொடர் பாளர் ஹாரி குரால் தெரிவித் தார்.
ஆனால், எந்த தேதி யில் எந்த இடத்தில் திருமணம் நடக்கும் என்ற தகவல்
வெளியிடப்படவில்லை. மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் ஓரின சேர்க்கை திருமணம்
கடந்த 2004ம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment