அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய பெண், கடந்த 15 நாட்களாக
உண்ணாவிரதம் மேற்கொண்டதால் சுருண்டு விழுந்து பலியானார். கோவாவை
சேர்ந்தவர் லைவிடா கோம்ஸ். 2004ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்
அவர். அட்லான்டாவில் உள்ள டெல்டா ஏர்லைன்ஸ் தலைமை அலுவலகத்தில்
பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். அங்குள்ள வெர்னான் ஹில்ஸ் ஓட்டலில்
கடந்த2 ஆண்டுகளாக தங்கியிருந்தார் கோம்ஸ். டெல்டா ஏர்லைன்ஸ் தொடர்பான ஒரு
வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆஜராகாமல் கோம்ஸ் தவிர்த்தார்.
அடுத்தடுத்து பல சம்மன்கள் அனுப்பியும் வராததால் அவரை கைதுசெய்ய
போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டிசம்பர் 14ம் தேதி
கோம்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது கைதை கண்டித்து
அன்று முதலே 15 நாட்களாக கோம்ஸ் உண்ணாவிரதம் இருந்தார். ஜனவரி 3ம் தேதி
பசியால் துடிதுடித்து சிறைக்குள் கோம்ஸ் சுருண்டு விழுந்து பலியானார்.
இங்கிலாந்தில் இருக்கும் அவரது உறவினர்கள் அமெரிக்கா வருவதில் ஏற்பட்ட
தாமதத்தால் கோம்சின் இறுதிச் சடங்கு தள்ளிப் போனதாகவும், அவரது மரணம்
பற்றி தகவல் இப்போதுதான் தெரிய வந்ததாகவும் சிகாகோ டைம்ஸ் நாளேடு செய்தி
வெளியிட்டது.
No comments:
Post a Comment