பெற்ற மகளை வைத்து விபசாரத் தொழில் செய்த தாய் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில், தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் விபசார தொழில்
நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, விபசார
கும்பலை பிடிக்க, விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.சாண்டியாகோ
தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், சென்னையில்சந்தேகத்திற்கு இடமான வகையில் இருக்கும்,
தங்கும் விடுதிகள், வீடுகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த
நிலையில், கொளத்தூர் விநாயகபுரம் பகுதியில் ஒரு வீட்டில், சில பெண்களை
வைத்து ரகசியமாக விபசாரதொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து, விபசார கும்பலிடம் உள்ள ஒரு செல்போன் எண்ணை கைப்பற்றி,
போலீசார் பேச்சு கொடுத்தனர். மறுமுனையில்பேசியவர், "அழகான இளம்பெண்கள் 4
பேர் இங்கு உள்ளனர். ரூ.5 ஆயிரத்துடன் வந்தால், பெண்ணை நீங்களே
தேர்ந்தெடுத்து உல்லாசமாக இருக்கலாம்'' என்று ஆசை வார்த்தை கூறினார்.
உடனே, சம்பந்தப்பட்ட வீட்டிற்குபோலீசார் மாறுவேடத்தில் சென்றனர். அங்கு
பெண்களை வரிசையாக நிற்கவைத்து, பணம் கேட்டபோது, போலீசார் விபசாரம்
நடப்பதை உறுதி செய்தனர். உடனே, அங்கு விபசாரம் நடத்தி வந்த உஷா ஜெயின்
(வயது 47), ஜெகதீஸ்வரி (48) ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அங்கு
விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களையும் மீட்டனர்.
பின்னர், அந்த பெண்களிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியான
செய்தி ஒன்று கிடைத்தது. அதாவது, விபசாரத்தில்ஈடுபடுத்தப்பட்ட பெண்களில்
ஒருவர், விபசார தொழில் நடத்திய உஷா ஜெயினின் மகள் என்பது தெரியவந்தது.
மேலும், இருவருமே கணவனால் கைவிடப்பட்டவர்கள் என்றும்,
வயிற்றுப்பிழைப்புக்காக விபசாரதொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதே போல கொருக்குப்பேட்டையில் விபசார விடுதி நடத்திய வேளாங்கண்ணி என்ற
பெண் கைது செய்யப்பட்டார்.
கைதான உஷா ஜெயின், ஜெகதீஸ்வரி, வேளாங்கண்ணி ஆகியோர் சைதாப்பேட்டை மெட்ரோ
பாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில்
அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment