Saturday, 28 January 2012

என்னை கொலை செய்துவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்தார் -ராமதாஸ்

வன்னியர் கல்லூரி விவகாரம் பெரிதாகி வருகிறது. டாக்டர் ராமதாஸ் மீது
போலீஸில் புகார் கொடுத்த கல்லூரியின் பேராசிரியர் மாயகிருஷ்ணன்
மீதுகல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்த நிலையில் தற்போது ஒரு மாணவரும்
புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பச்சைக் கவுண்டர் என்கிற அந்த மாணவர் ஒலக்கூர் காவல்
நிலையத்தில் கொடுத்துள்ளபுகாரில்,
டாக்டர் ராமதாஸுக்கு எதிராக புகார் கொடுத்த உதவிப் பேராசிரியர்
மாயக்கிருஷ்ணன், கல்லூரி மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும்
வகையில்பேசுவார்.
கட்டணம் செலுத்த வேண்டாம், சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகளுக்கு வர
வேண்டும் என்று கூறுவார். இதை எதிர்த்துக் கேட்டதால் என்னை கொலை
செய்துவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டினார், தட்டிக் கேட்டபோது மிரட்டினார்
என்று மாயகிருஷ்ணன் மீது ஏற்கனவே கல்லூரி அலுவலர் மாமல்லனும் ஒரு புகார்
கொடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக மாயகிருஷ்ணன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில்
தன்னை டாக்டர் ராமதாஸ் தூண்டுதலின் பேரில் கல்லூரி இயக்குநர்
ஹரிகிருஷ்ணன் அவரது உதவியாளர் வெங்கடேசன் தாக்கினர் என்று
கூறியிருந்தார். இதன் பேரில் ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார்
வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மாறி மாறி
புகார்களாக வந்தவண்ணம் உள்ளன.

கூகுள் பின்வாங்க ட்விட்டர் ஆயுத்தம் ஆகின்றது

கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற,
பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார்
செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள்
நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில்
கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு துணைபோகும்
விஷயங்கள், மத உணர்வை புண்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தியாவின் இணையவெளி தடையற்றதாக உள்ளதால், இளம் தலைமுறை ஆபாசம், வன்முறை
மற்றும் தீவிரவாதத்துக்கு துணைபோக இந்த இணையதளங்கள் துணைபோகின்றன.
இவற்றால் மதக் கலவரம் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட
நிறுவனங்கள் அல்லது இந்த இணையதளங்களை வழங்கும் கூகுள் போன்ற நிறுவனங்கள்
சென்சார் செய்ய வேண்டும்", எனக்கோரி டெல்லியைச் சேர்ந்த வினய் ராய்
என்பவர் டெல்லி நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
கூகுளின் ஆர்குட், யு ட்யூப் மற்றும் யாஹூ தளங்களில்தான் அதிக அளவு
மதவெறியைத் தூண்டும் வகையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கடவுள்களை
மிக மோசமாக சித்தரித்துள்ளதாக இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்
மனுதாரர்.
இந்த வழக்கு விசாரணையின்போது கூகுள் உள்ளிட்ட 21 நிறுவனங்களும்,
இணையவெளியில் தணிக்கை முறைகளை மேற்கொள்ள முடியுமா... மோசமான விஷயங்களை
தடை செய்ய முடியுமா என்பது குறித்து மார்ச் 13-ம் தேதிக்குள்
பதிலளிக்குமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனுக்கு எதிராக கூகுள்,யாஹூ, பேஸ்புக் உள்ளிட்ட 21 நிறுவனங்களும்
சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் இந்தியா சர்வாதிகார நாடல்ல,
ஜனநாயக நாடு. ஆபாசம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் இங்கே சட்டப்படி தடை
செய்ய முடியாது என வாதிட்டன.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில் சுவிட்ஸர்லாந்துநாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக
பொருளாதார மாநாட்டில் இந்தியாவிலிருந்து 113 பேர் கொண்ட குழு
பங்கேற்றுள்ளது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த
மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
Read: In English
இதில் கூகுளின் இந்தியப் பிரிவுக்கான தலைமை விற்பனை அலுவலர் நிகிலேஷ்
அரோரா கூறுகையில், "இந்தியாவில் இணையவெளியை சென்சார் செய்வது இயலாத
காரியம். அப்படிச் செய்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கருத்து
சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலாகிவிடும்," என்றார்.
மேலும் கூறுகையில்,"எல்லாவற்றையும் தணிக்கை செய்து, சுத்தமான விஷயமாகத்
தருவது அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாகப்
போய்விடும். மேலும் இந்தியாவின் இணையவெளியில் கூகுள் மூலம் வரும் ஆபாச-
மத வெறி விஷயங்களுக்கு இந்தியாவில் இயங்கும் அந்த நிறுவனக் கிளை
பொறுப்பாகாது," என்றார்.
மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி
இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும்
சென்சார்செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும்
நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம்
வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என
அறிவித்துள்ளது.
இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன்
மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.
இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப்
புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி
வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள்
இடமளிக்கின்றன. இந்த நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines)
எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள்
தடை செய்வதில்லை. ஆனால்சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.
பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மதரீதியான வக்கிரமான
கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத்
தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது.
சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு
புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து
செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு
கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன
அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது.
அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய
தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக்
கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை
வலியுறுத்துவதால் அதை கடுமையாகபின்பற்றுகின்றன கூகுள் போன்றவை.
ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள்
எதுவும்இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக்
கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும்
நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு
மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக
ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர்.
இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும்
சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என
வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட
நிறுவனங்களை, ஏன் இந்தகுப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என
கேள்வி எழுப்பி வருகின்றன.
இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது
என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதைசெய்ய மாட்டோம் என்றும்,
அது இந்தியாவின் வளர்ச்சியை

நயன் காதலுக்கு நாமம் போட்ட பிரவுதேவா

காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து
கொண்டிருக்கிறார்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும்.
ஆனால் இங்கே என்னடா என்றால், ரெண்டு பேருக்கும் புட்டுக்கிச்சு என்று
கிசுகிசுபரப்புகிறார்கள். அதுவே செய்தியாகவும் கசிவதால் அதையெல்லாம்
படித்துவிட்டு, இந்த பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று நமுட்டு
சிரிப்பு சிரிக்கிறதாம் ஜோடி.
நயன்தாரா மீண்டும் நடிக்கப் போகிறார் என்று வெளிவரும் செய்திகளிலும்
அவ்வளவு உண்மை இல்லையாம். அவரை தேடிச் சென்று அழைக்கிற சில
இயக்குநர்களிடம், யோசிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். நேரில்
வருகிறவர்களிடம் முகத்தில் அடித்த மாதிரி பதில் சொல்ல முடியாதல்லவா?
அதனால்தான் இப்படி ஒரு பதில்.
எப்படி இருக்கிறது இப்போதைய நிலவரம்? பிரபுதேவா இந்தியில் இயக்கிக்
கொண்டிருக்கும் ரவுடிரத்தோர் படப்பிடிப்பு பதாமியில் நடந்து வருகிறது.
அவ்வப்போது கிளம்பி பதாமிக்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா.
சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கு
திரும்பிவிடுகிறார். இந்த சந்திப்பும் மிக மிக சுமூகமாகவே இருக்கிறதாம்.
அதுமட்டுமல்ல, இவர்கள் இருவருமே சென்னையின் காஸ்ட்லி பகுதியான போர்ட்
கிளப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும் தகவல்.
உண்மை இப்படியிருக்கும் போது எதற்காக திரும்ப திரும்ப இவர்களின் காதலை
டெட்டால் ஊற்றி கழுவிக் கொண்டேயிருக்கிறது மீடியா என்பதுதான் புரியவே
இல்லை! சும்மா கௌப்பிவிட்டது சில நேரத்துல உண்மையானது மாதிரி
என்னமாச்சும் நடந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல....

காதல் முறிவு: நயன்தாரா, பிரபுதேவா சமரச முயற்சி தோல்வி

நயன்தாரா , பிரபுதேவாவின் மூன்றரை வருட காதல் முறிந்துள்ளது.இருவரும் சில
மாதங்களுக்கு முன்பே திருமணத்துக்கு தயாரானார்கள். அதற்கு வசதியாக
பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவும்
சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து
மதத்துக்கு மாறினார்.
சினிமாவை விட்டு விலகியபோது நயன்தாரா உச்சத்தில் இருந்தார். அவர் தமிழில்
கடைசியாக நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
சம்பளத்தை ஒரு கோடியாக நிர்ணயித்து நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள்
படங்களில் நடிக்க நயன்தாராவை மொய்த்தனர். எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்து புராணகதை சீதை வேடம் என்பதால் தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற
படத்தில் மட்டும் நடித்து கொடுத்தார். அதன் பிறகு திருமணத்துக்கு
தயாரானார். ஆனால் பிரபுதேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டது.
திருமணத்துக்கு தாமதம் செய்தார். பட வேலைகள் இருப்பதாகசாக்குபோக்கு
சொல்லி தள்ளி வைத்தார்.
அதே நேரம் தான் இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் நடித்த ஹன்சிகா
மோட்வானியிடம் நட்பை இறுக்கமாக்கி வந்தார். இந்த தகவல்கள் நயன்தாராவுக்கு
தெரிய வர மோதல் உருவானது. இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் நட்பு
நடிகர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் தகராறு தீரவில்லை.
தற்போது இருவரும் அமைதியாக பிரிவது என்று முடிவு எடுத்து பிரிந்து
விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நயன்தாரா மீண்டும் நடிக்க
முடிவு செய்து தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாகியுள்ளார். அடுத்து
தமிழ் படத்திலும் நடிக்க கதை கேட்கிறார்.

சூர்யா ஜோடி ! : ஹன்சிகா குஷி

' மாப்பிள்ளை ' படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு
அறிமுகமானவர் ஹன்சிகா. அப்படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக
நடித்து வருகிறார்.
' சின்ன குஷ்பு ' என அவரது ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். தற்போது அவர்
ஒப்பந்தமாகி இருக்கும் படங்கள்யாவும் இரண்டு நாயகிகள் கதையாக இருக்கிறது.
' வேலாயுதம் ' படத்தில் விஜய் ஜோடியாக நடித்தாலும் , ஜெனிலியா இன்னொரு
நாயகியாக நடித்து இருந்தார். தற்போது சிம்புவுடன் ' வேட்டை மன்னன் '
படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சிம்புவிற்கு நாயகியாக அல்லாமல் ஒரு கேங்ஸ்டர் பாத்திரத்தில் நடிக்க
இருக்கிறார் ஹன்சிகா. நாயகியாக தீக்ஷா சேத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவர் இல்லாமல் , மற்றொரு நாயகியும் இப்படத்தில்நடிக்கிறார். ஆக , மூன்று
நாயகிகளில் ஒருவராக ஷன்சிகா இருப்பார். இருப்பினும் , அது தனக்கு
வித்தியாசமான பாத்திரம்என்பதால் நடிக்க ஒப்புக்க்கொண்டாராம்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து
நடிக்க இருக்கிறார். "அனுஷ்கா நாயகியாக இருந்தாலும் எனக்கும்படத்தில்
நடிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இயக்குனர் என்னுடைய பாத்திரத்தை
அழகாக வடிவமைத்து இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.
சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால் , தனக்கான ரசிகர் வட்டம் இன்னும்
அதிகமாகும் என்று நம்புகிறார்.
இரண்டு நாயகிகள் படமாக இருந்தால் என்ன... மூன்று நாயகிகள் படமாக
இருந்தால் என்ன.. ? மக்கள் மனதில் இடம் பிடிப்பது தான் முக்கியம்.. என
தோழிகளிடம் சொல்லி வருகிறார் ஹன்சிகா.

பத்தாயிரம் கோடி பட டைரக்டருக்கு மிரட்டல்!

அரசியல் தரகர் நீரா ராடியா பற்றியும் , 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும்
படம் எடுத்து வரும் டைரக்டருக்கு மிரட்டல் வந்துள்ளது. நாட்டையே உலுக்கிய
2 ஜி-ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் பல முக்கிய புள்ளிகளுக்கு அரசியல் தரகராக
செயல்பட்டவர் நீரா ராடியா. இந்த நீரா ராடியா கதையை மையப்படுத்தி
பத்தாயிரம்கோடி என்ற பெயரில் புதிய படமொன்று உருவாகி வருகிறது. முக்தா
சீனிவானின் மகன் வி.சீனிவாசன் சுந்தர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் சீனிவாசனுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் , அரசியல் புரோக்கராக இருந்து ஒரு
பெண் சேர்த்து வைத்த பத்தாயிரம் கோடி பணத்தை கருவாக வைத்து இப்படம்
தயாராகிறது. தரகர் வேடத்தில் பல்ஜித் கவுர் என்பவர் நடிக்கிறார். இப்படம்
நீரா ராடியா பற்றிய கதை என்ற தகவல் பரவி விட்டதால் எனக்கு மிரட்டல்கள்
வந்தன. நீரா ராடியாகதையை படமாக்க கூடாது என்று மிரட்டினார்கள்
என்றார்கள். மிரட்டியவர்கள் யார் என்ற விவரங்களை எனது தந்தை முக்தா
சீனிவாசனிடம் தெரிவித்து விட்டேன். இப்படத்தில் நாயகனாக துருவ் ,
நாயகியாக மாடல் ஷா மற்றும் கோகுல் செல் முருகன் உள்ளிட்ட பலர்
நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது , என்று
கூறியுள்ளார்.

முதல்வர் ஜெ.,நினைத்தால் கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனே துவக்க முடியும்


முதல்வர் ஜெ.,நினைத்தால், கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனடியாக துவங்கிவிடலாம்''என, தூத்துக்குடி உண்ணாவிரதத்தில், அணுமின்நிலைய ஆதரவாளர்கள் பேசினர். கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தியை உடனே துவங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின்உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டி சார்பில், தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன், உண்ணாவிரதம் நடந்தது. சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமை வகித்தார். தேவர் பேரவை தலைவர் சேதுராமன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி, சமுதாய தலைவர்கள், அணுஉலை ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மக்களை திசைதிருப்ப முயற்சி: இதில், சந்திரன் ஜெயபால் பேசியதாவது: முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகஉள்ளது. அதனால் ஆபத்துஎன, கேரளமுதல்வர் உம்மன்சாண்டி கூறுகிறார். அதுபோல, கூடங்குளம் அணுமின்நிலையத்தால் பேராபத்து எனக்கூறி மக்களை திசைதிருப்ப இங்குள்ள உம்மன்சாண்டி நினைக்கிறார். மக்களுக்கு மின்சாரம் மிக அவசியம். ஆனால், இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச்செல்கின்றனர்.


ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒருபகுதிமக்களின் அச்சம் தீரும்வரை, இங்கு அணுமின் உற்பத்தியை துவங்கக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.ஆனால், இந்த அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி துவங்கப்படுமா? என தற்போது பெரும்பாலான மக்களிடையே தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மீண்டும் சட்டசபையைக்கூடி, மக்கள் அச்சம் தீர்ந்துவிட்டதால், இந்த அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றவேண்டும். முதல்வர் ஜெ.,நினைத்தால் இந்த அணுமின்நிலையத்தில் உடனடியாக மின்உற்பத்தியை துவங்கிவிடலாம். அவ்வாறே பொதுமக்களும் கருதுகின்றனர். அதை அவர் உடனடியாக செய்யவேண்டும். ஏனெனில், தொழில்வளர்ச்சி, விவசாயம், எதிர்கால சந்ததியினருக்கு மின்சாரம் அவசியம். மின்சாரம் இல்லையென்றால் தமிழகம் இருளில்மூழ்கிவிடும். காமராஜர் ஆட்சிகாலத்தில் கல்பாக்கம் அணுமின்நிலையம், தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டு பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அன்று அதற்கு கிளம்பிய எதிர்ப்பை பார்த்து அவர் பின்வாங்கியிருந்தால், இந்த அற்புத திட்டங்கள் நமக்கு கிடைத்திருக்காது.


யாருக்குமே திருமணம் நடக்காது: அணுமின்நிலையம் குறித்த சந்தேகம் என்ற பெயரில் நாட்டின்பாதுகாப்பு, தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை போராட்டக்குழுவினர் கேட்கின்றனர். அணுமின்நிலையத்தால் எந்தபாதிப்புமில்லை என முன்னாள் ஜனாதிபதி கலாம் கூறியதையும் ஏற்கமறுக்கின்றனர். பிரசவத்தின்போது இறப்போம் என பெண்கள் பயப்பட்டால், இவ்வுலகில் யாருக்குமே திருமணம் நடக்காது. அணுமின்நிலைய எதிர்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து 54 கோடி ரூபாய் வந்தது குறித்த குற்றச்சாட்டை இதுவரை அவர்கள் மறுக்காதது ஏன்? போராட்டக்காரர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, அவர்களிடம் உரியவிசாரணை நடத்தவேண்டும். இந்த அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்க மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பேசிய அனைவருமே இதே கருத்தை வலியுறுத்தினர்.


தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தீர்மானம் : கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென அணுஉலை ஆதரவு உண்ணாவிரதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.