கொழும்பு, செப். 22-
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ்கெய்ல் சிறந்த
அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். ஐ.பி.எல். போட்டிகளில் அவரது அதிரடியான
ஆட்டத்தை ரசிகர்கள் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். 20 ஓவர் உலக
கோப்பை போட்டியிலும் கிறிஸ்கெய்ல் முத்திரை பதித்து உள்ளார்.
உலக கோப்பை போட்டியில் அதிக சிக்சர் மற்றும் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்
அடித்த வீரராக கெய்ல் உள்ளார். அவர் 11 ஆட்டத்தில் 27 சிக்சர் அடித்து
முதலிடத்தில் உள்ளார்.
2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 சிக்சர்
அடித்தார். உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்
இதுவாகும்.
உலக கோப்பையில் அதிரடியாக விளையாடி வரும் கிறிஸ்கெய்ல்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிவாரா? என்று
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியில் வாட்சன், வார்னர் சிக்சர் அடிப்பதில் வல்லவர்கள்.
இதனால் இன்று வாணவேடிக்கை நிகழ்த்தப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment