Thursday, 26 January 2012

ப்ளூ பிலிம் நடிகர்கள் கட்டாயம்காண்டம் அணிய வேண்டும் - அமெரிக்காவில் புதிய சட்டம்

அமெரிக்காவில் நீலப்படங்களை தயாரிக்க சட்டப்பூர்வமாக
அனுமதிக்கப்படுகிறது. இந்த படங்களில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் தங்களை
நீலப்படம் நடிகர்கள் என்று சொல்லி கொள்வதற்கு வெட்கப்படுவது கூட இல்லை.
இதனால் நீலப்படம் தயாரிக்கப்படும் நாடுகளில் அமெரிக்கா முன்னணியில்
உள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும்நீலப்படங்களில் 90 சதவீதம்
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தான் தயாரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நீலப்படத்தில் நடித்த ஒரு நடிகருக்கு எய்ட்ஸ் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தபடங்களில் நடிப்பவர்களுக்கு கடும்
அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகமும் இது பற்றி கவலை கொள்ள
ஆரம்பித்தது. எனவே இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்கள்.
நீலப்படங்களில்நடிப்பவர்களுக்கு இதுவரை எந்த கட்டுப்பாடும் விதிக்காமல்
இருந்தனர்.
எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க இப்போது அனைத்து நடிகர்களும் கட்டாயம் ஆணுறை
அணிய வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம் சட்டம் கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டத்தில் நகர மேயர் கையெழுத்திட்டுள்ளார். புதிய சட்டத்துக்கு
நீலப்பட தொழில் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். புதிய
சட்டத்தால் இந்த தொழிலில் உள்ள அனைவரும் வேறு நகருக்கு இடம்பெயர வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் எஸ்ட்ஸ்
விழிப்புணர்வு இயக்கங்கள் புதிய சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

No comments:

Post a Comment