எப்போதும் தண்ணியுடன் இருப்பதுதான் என் அழகின் ரகசியம், என்று நடிகை
ஓவியா கூறியுள்ளார். களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு
அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம்
ரசிகர்களை கட்டிப்போட்ட ஓவியாவுக்கு அடுத்தடுத்த படங்கள் அமையவில்லை
என்றுதான் சொல்ல வேண்டும்.
கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் சிறு கேரக்டரில் மட்டுமே வந்தார்.
தற்போது மெரினா படத்தில் நடித்து வரும் ஓவியா தனது அழகு ரசிகயம் பற்றி
பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
தினமும் தேன் சாப்பிடுவேன். கேரளத்து மலைத் தக்காளியை முகத்துல
பூசிப்பேன். இந்த இரண்டு விஷயத்தையும் தவறாமல் செய்வேன். தண்ணீர் அதிகம்
குடிப்பேன். எப்போதும் ஹேண்ட் பேக்கில் தண்ணீர் பாட்டில் இருந்துகொண்டே
இருக்கும். அப்படியே முகத்தையும் அடிக்கடிகழுவிக் கொள்வேன். அதுதான்
என்னுடைய அழகின் ரகசியம். தண்ணீரை அதிகமா குடிக்க வேண்டும், முகத்தை
அவ்வப்போது கழுவ வேண்டும். இந்த இரண்டையும்செய்யும்போது கண்டிப்பா
ஓவியாவை நினைத்துக் கொள்ளுங்கள், என்று கூறியிருக்கிறார் ஓவியா.
No comments:
Post a Comment