மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து மயங்க செய்து நண்பருடன் சேர்த்து ஆபாச
படமெடுத்த பின் இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டிய கணவன் மீது கோவை
போலீசார் வழக்குபதிவுசெய்துள்ளனர். நீலகிரி மாவட்டம்ஊட்டி அடுத்த
பிக்கட்டியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், உடலில் காயத்துடன் கோவை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 9ம் வகுப்பு வரை படித்துள்ள அவர்
அனைத்து மகளிர் போலீசில் அளித்தபுகாரில் கூறியிருப்பதாவது:
எனக்கும், பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த முகமது பயாசுக்கும்(25)கடந்த
2010ல் திருமணம் நடந்தது.கணவர் கார்பென்டர். திருமணத்தின்போது பெற்றோர் 7
பவுன் நகையும், ரூ.1.25 லட்சமும் கொடுத்தனர். திருமணத்துக்குப்பின்
பெங்களூரில் தனிகுடித்தனம் நடத்தினோம். சில மாதங்களிலேயே கணவர் மேலும்
நகை, பணம் கேட்டு டார்ச்சர் செய்ய துவங்கினார். சமீபத்தில் தலைவலிக்கு
மாத்திரை கேட்டேன். கணவன் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதும்
மயங்கிவிட்டேன்.
பின்னர் அவரது நண்பரை என்னோடு சேர்த்து ஆபாச வீடியோ எடுத்துள்ளார்.
மயக்கம் தெளிந்ததும் அதை என்னிடம் காட்டி எனது பெற்றோரிடமிருந்து 10
பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வாங்கி வராவிட்டால் இந்த ஆபாச படத்தை
இன்டர்நெட்டில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினார். என்னை அடித்தும்
துன்புறுத்தினார். நான் கோவையில் உள்ள எனது அண்ணன் வீட்டுக்கு
வந்துவிட்டேன். இங்கு வந்தும் என்னை தாக்கினார். எனது கணவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து, முகமது
பயாஸ் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு
சட்டம் உட்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பயாசை
தேடி பெங்களூருக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.
No comments:
Post a Comment