Monday, 9 January 2012

ராஜஸ்தான் நர்ஸ் பன்வாரி தேவியின் வாட்ச், கம்மலை மகன் அடையாளம் காட்டினார்

ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன நர்ஸ் பன்வாரிதேவியின் வாட்ச் மற்றும்
கம்மல், ஜோத்பூர் அருகே உள்ள கால்வாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன நர்ஸ் பன்வாரிதேவியின் வழக்கை சிபிஐ
விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மகிபால்,
எம்எல்ஏ மால்கன்சிங், பன்வாரியின் கணவர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 9
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்வாரியை கொன்று அவரது பிணத்தைஎரித்து விட்டதாக கூலிப்படையைச்
சேர்ந்தவர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர். ஜோத்பூர் அருகே ராஜீவ்காந்தி
கால்வாயில் பன்வாரிதேவியின் வாட்ச் மற்றும் நகைகளை வீசியதாககூலிப்படையைச்
சேர்ந்த கைலாஷ் ஜாக்கர் என்பவன் கூறினான். இதன் அடிப்படையில் மத்திய தடய
அறிவியல் ஆய்வக குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் கால்வாயில் தேடுதல் பணியை
தொடங்கினர்.
இதில் பன்வாரிதேவியை கொலை செய்யபயன்படுத்திய ஆயுதங்கள், அவர்
அணிந்திருந்த கைக்கடிகாரம் மற்றும் காதணிகள் கிடைத்தன. கைக்கடிகாரம்
மற்றும் காதணிகள் பன்வாரி தேவிக்கு சொந்தமானது என்பதை அவரது மகன் சாஹில்
நேற்று உறுதி செய்தார். கால்வாய் அருகே பன்வாரி தேவி எரிக்கப்பட்டதாக
கூறப்பட்ட இடத்திலிருந்து சாம்பலை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சாம்பல் டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment