விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா நடிப்பில் வெளியாக
இருக்கும் படம் நண்பன் , ஷங்கர் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து
இருக்கிறார். ஜெமினி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.
நண்பன் படம் 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய்
நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012ல் பொங்கல் அன்று
வெளியீடுஎன்று அறிவிக்கப்பட்டது.
மாதவன் , ஆர்யா , சமீரா ரெட்டி , அமலா பால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி
இருக்கும் படம் வேட்டை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க , யு.டிவி நிறுவனம்
இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறது. இப்படமும் 2011ம் ஆண்டே
தயாரானாலும் பாடல் காட்சிகள் பாக்கி இருந்ததால் 2012ல் பொங்கலுக்கு
வெளியீடு என்று தீர்மானிக்கப்பட்டது.
நண்பன் , வேட்டை மட்டுமே பொங்கல்விடுமுறைக்கு போட்டியிடுகிறது.தியேட்டர்
அதிபர்கள் , விநியோகஸ்தர்கள் மத்தியில் இரண்டு படங்களுக்குமே அதிக
வரவேற்பு இருந்து வருகிறது.
வேட்டை படத்தின் இசையை வெளியிட்டது நண்பன் படத்தினை இயக்கிய ஷங்கர்.
அப்போது பேசிய ஷங்கர் " லிங்குசாமி இயக்கிய படங்கள் எப்போது மாஸ் +
கிளாஸ் இணைந்து இருக்கும். அது தான் அவரது படத்தின் சிறப்பு. ' வேட்டை '
படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது ' ரன் ', ' பையா ' இணைந்து இருக்கும்
" என்று வாழ்த்தினார்.
இயக்குனர் லிங்குசாமி பேசும் போது " ' வேட்டை ' படத்துடன் இணைந்து ஷங்கர்
சாரின் ' நண்பன் ' படமும் வருகிறது. ' வேட்டை ' படத்தினை விட வசூலிலும்
சரி , ஓடும் நாட்களிலும் சரி ' நண்பன் ' முதலாவதாக இருக்கும். " என்று
தெரிவித்தார். அதுமட்டுமல்லாதுபுதுவருட பிறப்பு அன்று ஷங்கர்
லிங்குசாமிக்கு போன் செய்து வேட்டை படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை
தெரிவித்து இருக்கிறார்.
இரண்டு பேருமே தங்களது படங்கள் வசூலில் முதலாவதாக இருக்கும் என்று கூறி
ஒன்றிணைந்து இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் மத்தியிலோ நண்பனா வேட்டையா
என்ற போட்டி தான் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment