Friday, 20 January 2012

தீராத கலைத்தாகம்: நடிகை அசின்

திரைப்படத் துறையில் நடிகை அசினின் கலைத்தாகம் இன்னமும் தீர வில்லையாம்.
"எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், வெளியான செய்தியில் அசின் கேரளாவில்
மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. .
தொழிலதிபர் மகளாக இருந்து கொண்டு ஏன் நடிக்க வர வேண்டும் என்று பலரும்
எழுப்பிய கேள்விக்கு ஒரே பதிலாக வந்தது கலை தாகம்தான்.
தனது சொந்த தொழிற்சாலைகளை நிர்வகிப்பதில் பலே கில்லாடியாக விளங்கும்
அசினுக்கு, சினிமா மீது இருந்த ஆசைதான் அவரை நடிகை ஆக்கியிருக்கிறது.
சரி கலைத்தாகத்தால் நடிக்க வந்த அசினுக்கு அந்த தாகம் தீர்ந்ததா என்றால்
இல்லை என்ற பதில் வருகிறது. கொலிவுட்டில் கோலோச்சி விட்டு பாலிவுட்டில்
நுழைந்திருக்கும் அசினுக்கு அங்கு எதிர்பார்த்த அளவு வெற்றி
கிடைக்கவில்லை.
வாய்ப்புகளும் ஒன்றிரண்டுதான் வருகின்றன. இதனால் தாகம் தீராத அசினாக
பாலிவுட்டை வலம் வந்து கொண்டிருக்கிறாராம் அம்மணி.

No comments:

Post a Comment