என்னை சில நண்பர்கள் டேட்டிங் செய்ய அழைத்தார்கள். ஆனால் எனக்கு
காதலில்தான் விரும்பம். முத்தம் கொடுப்பதில் நடிகர்களைவிட பாம்புதான்
எக்ஸ்பர்ட் என்றார் மல்லிகா ஷெராவத்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ஹாலிவுட் படத்தில் நடிக்க சமீபத்தில் லாஸ்
ஏஞ்சல்ஸ் சென்று திரும்பினேன். பாலிவுட்டில் நடிகர், நடிகைகள் பாரபட்சம்
பார்க்கிறார்கள். ஹாலிவுட்டில் அந்த வித்தியாசம் கிடையாது. இங்கு
குத்தாட்டம் ஆடுவதற்கு மட்டுமே வாய்ப்பு வருகிறதா? என்கிறார்கள். ஆரம்ப
காலத்தில் அப்படி இருந்தது. இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது.
இளம் இயக்குனர்கள் மிகவும் துணிச்சல்காரர்களாக இருக்கிறார்கள். முக்கிய
வேடங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எனது
சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் கூறினார்கள். அவர்கள் வாக்கு
பொய்யாகிவிட்டது.
சமீபத்தில் பேட்டி அளித்த பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிஎன்னைபற்றி
கமென்ட் அடித்திருக்கிறார். மல்லிகாவுடன் முத்தக்காட்சியில் நடிப்பது
ஆர்வத்தை தூண்டவில்லை என்று கூறி இருக்கிறார். அது அவரது கருத்து. ஆனால்
என்னைப் பொறுத்தவரை பாம்புக்கு முத்தம் கொடுத்து நடிப்பதுதான் ஆர்வத்தை
தூண்டுவதாக உள்ளது. ஹிஸ்ஸ் என்ற படத்தில் பாம்புடன்நடித்தேன். அப்போது
பாம்புக்கு நிறைய முத்தம் கொடுத்திருக்கிறேன். அதுவும் முத்தம்
கொடுத்திருக்கிறது. உண்மையில் நடிகர்களைவிட பாம்புதான் முத்தம்
கொடுப்பதில் எக்ஸ்பர்ட்.
என்னை சில நண்பர்கள் டேட்டிங் செய்ய அழைத்தார்கள். ஆனால் எனக்கு
காதலில்தான் விரும்பம். அதுபோன்ற வாய்ப்பு படங்கள் மூலமும், நல்ல
ஸ்கிரிப்ட் மூலம் கிடைக்கிறது. ஒரு ஆண்மகனை காதலிப்பதைவிட ஸ்கிரிப்டை
காதலிப்பதில்தான் எனக்கு பரவசம் அதிகம். இவ்வாறு மல்லிகா ஷெராவத்
கூறினார்.
No comments:
Post a Comment