Monday, 30 January 2012

எங்களுக்குள்ளிருக்கும் நட்பை தவறாக நினைக்க வேண்டாம் , திரிஷாவேண்டுகோள்!

கொலிவுட்டில் நட்சத்திர நாயகிகள் மத்தியில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக
ஷிட்னி ஸ்லேடன் இருந்து வருகிறார். இவரின் கலை வண்ணத்தில் உருவான ஆடைகளே
முன்னணி நடிகைகளின் வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.
இதனால் கொலிவுட்டில் ஷிட்னியை தெரியாத நடிகைகளே இருக்க மாட்டார்கள்.
குறிப்பாக நடிகை திரிஷாவின் சிறந்த நண்பராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஷிட்னி
கூறியதாவது,நடிகை த்ரிஷா மிஸ் சென்னை அழகியானதிலிருந்து எனக்கு நன்றாக
தெரியும்.
எங்களின் எட்டு வருட கால நெருக்கமான நட்பை திரையுலகம் நன்கு அறியும்.
சமீபத்தில் கோவாவில் இந்த வருடப் புத்தாண்டை கொண்டாடினோம்.
த்ரிஷாவின் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர் நான் தான். நான் வடிவமைக்கும்
உடைகளை படங்களில் நடிக்கும் போது திரிஷா பயன்படுத்துவார்கள்.
இந்த வருஷம் த்ரிஷாவின் புத்தாண்டு உடையை நான் தான் வடிவமைத்தேன். ஆனால்
எங்கள் நட்பை பற்றி ஆயிரம் பேர் பல விதமாக பேசுவது வருத்தமாக உள்ளது.
எங்களுடைய நல்ல நட்பை பார்த்து பொறாமைப்படும் சிலர் இவ்வாறு
கலங்கப்படுத்துகிறார்கள் என்றுகவலையுடன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment