Sunday, 8 January 2012

ஜெயலலிதா பற்றி அவதூறு நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்கு

முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறுசெய்தி வெளியிட்டதாக கொடுக்கப்பட்ட
புகாரின் பேரில் நக்கீரன் கோபால் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நக்கீரன் வாரம் இரு முறை இதழில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறுசெய்தி
வெளியிட்டுள்ளதாக புகார் கூறி, அதை கண்டிக்கும் வகையில் நேற்று முன்தினம்
தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.
சென்னையிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகம்
முன்பும் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டு, வேளச்சேரி எம்.எல்.ஏ.அசோக்
தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு சம்பவம் நடந்தது.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. அசோக் உள்பட அ.தி.மு.க.வினரை
கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நக்கீரன் பத்திரிகை
சார்பில் இது தொடர்பாக ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் புகார்
கொடுக்கப்பட்டது. அதன் பேரில் எம்.எல்.ஏ.அசோக் உள்பட அ.தி.மு.க.வினர்
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அ.தி.மு.க. பிரமுகர் அன்பு கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன்
ஆசிரியர் கோபால் மீது, கொலை மிரட்டல்(இ.பி.கோ.506-2) மன உளைச்சலை
ஏற்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை
உண்டாக்குதல்(505),உயர் பதவியில் இருப்பவர்களுக்கு களங்கம்
உண்டாக்குதல்(504) உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் ஜாம்பஜார் போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். கோபால்மட்டும் அல்லாது மற்றும் சிலர் மீதும்
வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று பகலிலும் ஏராளமான அ.தி.மு.க.வினர்
நக்கீரன்பத்திரிக்கை அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தினார்கள். நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்யக் கோரி அப்போது
கோஷம் எழுப்பினார்கள். நீண்ட நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கிடையில் நக்கீரன்அலுவலகத்தில் நேற்று மாலை போலீசார் சோதனை
நடத்தினர். கோபால், காமராஜ் எங்கே இருக்கிறார்கள் என்று
அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

No comments:

Post a Comment