Thursday, 22 December 2011

வரி செலுத்த மறுப்பு: கேரள மாநிலத்தவருக்கு அபராதம்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை வைத்து உள்ளார். முந்திரியை தமிழகம், கேரள பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவார். ஆனால் அதற்கான விற்பனை வரியை செலுத்த மறுத்தார். இது குறித்து சந்தை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற வேளாண் விற்பனை குழுவின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தமிழகத்தில் தொழில் செய்கிறார். அவர் தமிழக சட்டங்களை மதிக்க வேண்டும். அதை விடுத்து வரிசெலுத்த மறுப்பது விதண்டா வாதம். அவர் ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அதை அவர் கந்தர்வகோட்டை வேளாண் விற்பனை குழுவினரிடம் செலுத்த வேண்டும், என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment