Wednesday, 16 October 2013

எப்படினாலும் கப்பலை விடுவிப்போம் After a investigation the U.S. will release the ship g.k.vasan interview

முழுமையான விசாரணைக்கு பிறகு அமெரிக்கா கப்பலை விடுவிப்போம்: ஜி.கே.வாசன் பேட்டி      After a thorough investigation the U.S. will release the ship g.k.vasan interview


மத்திய மந்திரி ஜி.கே.வாசன் டெல்லி செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–ஆயுதங்களுடன் பிடிப்பட்ட அமெரிக்க கப்பலில் வந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.விசாரணை முடியும் வரை கப்பலை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. மத்திய அரசு ஒரு குழுவாகவும், மாநில அரசு ஒரு குழுவாகவும் முழுமையான விசாரணை நடத்துகிறது. விசாரணைக்கு பிறகுதான் அமெரிக்க கப்பலை விடுவிக்க முடியும்.தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை சிறைப்படுத்தியுள்ளது கண்டனத்துக் குரியது. இதற்கு நிரந்திர தீர்வை காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment