பாலகாட்டில் மகனை கிணற்றுக்குள் தள்ளி கொன்று தாயும் தற்கொலை பாலகாட்டில் மகனை கிணற்றுக்குள் தள்ளி கொன்று தாயும் தற்கொலை
கொழிஞ்சாம்பாறை, செப்.18-
பாலக்காடு மாவட்டம் மழம்புழா அருகேயுள்ள மாட்டு மந்தையை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு பிந்து (வயது 28) என்ற மனைவியும், கோபிகா (10), அகில் (8) என்ற குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணேசன் குடும்பத்தினர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மனம் உடைந்த பிந்து தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு அருகிலுள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு மகன் அகிலை பிடித்து கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தார். இதை பார்த்து பயந்த கோபிகா தாயிடமிருந்து தப்பி ஓடினார். அதன்பின்னர் பிந்து கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பாலக்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கிணற்றுக்குள் இருந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment