Saturday, 22 September 2012

மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்

கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை, செப்.22-
கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட அபிநயாவின் தந்தை அய்யப்பன்
கோவை சிறையில் தண்டனைக்கைதியாக உள்ளார். இவருக்கு மகள் இறந்தது குறித்து
தகவல் தெரிவிக்கப்பட்டதா என ஜெயில் சூப்பிரண்டு முருகேசனிடம் கேட்ட போது
அவர் கூறியதாவது:-
ஜெயிலுக்குள் உள்ள கைதிகள் படிப்பதற்காக தினமும் 5 பத்திரிக்கைகள்
அனுப்பப்படுகிறது. அந்த பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்த செய்தியை
பார்த்துதான் மகளின் சாவை அய்யப்பன் தெரிந்து கொண்டார். கதறி அழுத
அவருக்கு சககைதிகள் ஆறுதல் கூறினர். தற்போது அய்யப்பனை பரோலில் எடுக்க
யாரும் வரவில்லை. கைதியை பரோலில்எடுக்க உறவினர்கள் அல்லது அவருடைய மனைவி
யாராவது கோர்ட்டில் மனுதாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment