கடந்த மாதம் லண்டனில் முடிந்த ஒலிம்பிக் போட்டியில், டென்னிஸ் ஆண்கள்
இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயசுடன் ஜோடி சேர்ந்து
விளையாட சக வீரர்கள் மகேஷ் பூபதியும், ரோகன் போபண்ணாவும் மறுத்தனர்.
இதனால் வேறு வழியின்றி ஒலிம்பிக்குக்கு இரண்டு ஜோடிகளை இந்திய டென்னிஸ்
சங்கம் அனுப்பியது.
அணித்தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஒலிம்பிக் டென்னிசில் இந்திய
வீரர்கள் யாரும் கால்இறுதியை கூட தாண்டவில்லை. இதைத் தொடர்ந்து பெயசுடன்
இணைந்து விளையாட மறுத்த மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோர் மீது அகில
இந்திய டென்னிஸ் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை
டென்னிஸ் போட்டியில் அவர்கள் இருவரும் சேர்க்கப்படவில்லை. அத்துடன்
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய அணிக்காக டேவிஸ் கோப்பை டென்னிசில்
விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
டென்னிஸ் சங்கத்தின் முடிவுக்கு மகேஷ் பூபதி கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில்மும்பையில் இந்திய வீரர் மகேஷ்பூபதி நேற்று முன்தினம் அளித்த
பேட்டியில், இந்திய டென்னிஸ் சங்கத்தின் நிர்வாகமும் அதன் சர்வாதிகார
போக்கும் எதிர்கால இந்திய டென்னிசுக்கு தீங்கானவை. அகில இந்திய டென்னிஸ்
சங்க தலைவர் அனில் கன்னா, லியாண்டர் பெயசை பயன்படுத்தி என்னை பல முறை
அவர்பழிவாங்கியுள்ளார்.
வீரர்களை பிரித்தாளும் அனில் கன்னா, இந்திய டென்னிஸ் சங்கத்தின்
நிர்வாகத்தை ஒரு நபராக நடத்தி வருகிறார். செயற்குழு உறுப்பினர்கள்
எல்லாம் பெயரளவுக்கு தான் இருக்கிறார்கள். என் மீதான தடையை எதிர்த்து
வழக்கு தொடர ஆலோசனை செய்து வருகிறேன் என்றார். மகேஷ்பூபதியின்
குற்றச்சாட்டுக்கு அகில இந்தியடென்னிஸ் சங்கம் நேற்று மறுப்பு தெரிவித்து
இருக்கிறது.
இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க செயற்குழு உறுப்பினர்கள்
சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய டென்னிஸ் சங்க
செயற்குழு உறுப்பினர்கள் பெயரளவுக்கு தான் இருக்கிறார்கள் என்று
மகேஷ்பூபதி கூறியிருப்பது எங்களை அவமானப்படுத்தும் செயலாகும். செயற்குழு
உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், ஒவ்வொரு விஷயத்தையும்
செயற்குழுவில் விவாதித்து த�® �ன் முடிவு எடுக்கப்படுகிறது.
இது தான்உண்மையில் நடப்பதாகும். அகில இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகம்
தொழில் ரீதியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 6 கமிட்டிகளின்
சேர்மன்களும் மிகுந்த தகுதியும், திறமையும் அனுபவமும் படைத்தவர்கள். அகில
இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகம் ஜனநாயக ரீதியாகவும், வெளிப்படையாகவும்
செயல்பட்டு வருகிறது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment