லத்தேகர், செப்.23-
ஜார்க்கண்ட் மாநிலம், லத்தேகர் மாவட்டம், குர்டாக் கிராமத்தில் நேற்று
நக்சலைட்டுகள் நடமாட்டம்இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு எல்லை பாதுகாப்பு படை போலீசாரும், உள்ளூர் போலீசாரும்
விரைந்து சென்றனர். அங்கு நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே
சுமார் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4
நக்சலைட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment