Thursday, 20 September 2012

ரூ.3 1/2 கோடி மோசடி வழக்கு: செல்வி மருமகன் ஜோதிமணியிடம் போலீஸ் இன்று விசாரணை

ரூ.3 1/2 கோடி மோசடி வழக்கு: செல்வி மருமகன் ஜோதிமணியிடம் போலீஸ் இன்று
விசாரணை ரூ.3 1/2 கோடி மோசடி வழக்கு: செல்வி மருமகன் ஜோதிமணியிடம் போலீஸ்
இன்று விசாரணை
ரூ.3 1/2 கோடி மோசடி வழக்கு: செல்வி மருமகன் ஜோதிமணியிடம் போலீஸ் இன்று விசாரணை
சென்னை, செப். 20-
சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் தி.மு.க.
தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் டாக்டர் ஜோதிமணி
ஆகியோர் மீது ரு. 3 1/2 கோடி பண மோசடி புகார் கூறியிருந்தார்.
சோழிங்கநல்லூர் அருகே தாழும்பூர் கிராமத்தில் செல்விக்கு சொந்தமான 2.94
ஏக்கர்நிலம் உள்ளது. ஜோதிமணி மூலம் இந்த நிலத்தை ரூ. 5 கோடியே 14
லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாங்க விலை பேசி அதில் ரூ. 3 1/2 கோடி முன்
பணம் கொடுத்தேன். ஆனால் நிலத்தை எனக்கு விற்காமலும் பணத்தை திருப்பி
தராமலும் மோசடி செய்து விட்டனர் என்று நெடுமாறன் புகாரில்
கூறியிருந்தார்.
இதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நெடுமாறன்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசார் செல்வி, ஜோதிமணி ஆகியோர் மீது ஏமாற்றுதல், மோசடி,
கொலை மிரட்டல்ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
புகார்தாரர் நெடுமாறனிடம் குற்றப்பிரிவு போலீசார் முதலில்விசாரணை
செய்தனர். தொடர்ந்து செல்வி, ஜோதிமணி ஆகியோரை விசாரிக்க போலீஸ் முடிவு
செய்தது. இதற்காக இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில்
குற்றப்பிரிவு போலீசில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று
கூறப்பட்டு இருந்தது.
இதுபற்றி குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, செல்வி, ஜோதிமணி
ஆகியோர் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினோம். இன்று
பிற்பகல் ஜோதிமணியிடம் விசாரிப்போம், அதன் அடிப்படையில் செல்வியிடம்
விசாரிப்போம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment