பள்ளிப்பாளையம், செப்.22-
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்து வெப்படையை சேர்ந்தவர்கள்
சீனிவாசன் (வயது 27), பிரகாஷ் (22). இவர்களும் மற்றும் சிலரும் சேர்ந்து
விநாயகர் சிலையை கரைக்க வெப்படையில் இருந்து பள்ளிபாளையம் அக்ரஹாரம்
ஓம்காளியம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள காவிரி ஆற்றுக்கு நேற்று கொண்டு
வந்தனர்.
விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்தபோது சீனிவாசன், பிரகாஷ் ஆகிய 2 பேரும்
தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இறந்த சீனிவாசனுக்கு திருமணம் ஆகி 15 நாட்களே
ஆகி உள்ளது. புதுமாப்பிள்ளையான அவரது உடலை பார்த்து மனைவி மற்றும்
உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பிரகாசத்துக்கு
இன்னும் திருமணம் ஆகிவில்லை.
No comments:
Post a Comment