Thursday, 20 September 2012

திருமணம் செய்வதாக கூறி 2 1/2 ஆண்டுகள் உல்லாசம்

திருமணம் செய்வதாக கூறி 2 1/2 ஆண்டுகள் உல்லாசம் அரூர் போலீஸ்காரர் மீது
கிருஷ்ணகிரி ஆயுதப்படை பெண் போலீஸ் புகார் திருமணம் செய்வதாக கூறி 2 1/2
ஆண்டுகள் உல்லாசம் அரூர் போலீஸ்காரர் மீது கிருஷ்ணகிரி ஆயுதப்படை பெண்
போலீஸ் புகார்
திருமணம் செய்வதாக கூறி 2 1/2 ஆண்டுகள் உல்லாசம் அரூர் போலீஸ்காரர் மீது
கிருஷ்ணகிரி ஆயுதப்படை பெண் போலீஸ் புகார்
கிருஷ்ணகிரி, செப். 20-
கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வரும்
ராஜேஸ்வரி (38) என்பவர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார்
மனு கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:- நானும், தற்போது தர்மபுரி
மாவட்டம் அரூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் மலர்செல்வன்
என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போச்சம்பள்ளியில் உள்ள 7-வது
பட்டாலியனில் வேலைப் பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பழக்கம்
ஏற்பட்டது. பின்பு அது காதலாக மாறியது. இதையடுத்து நாங்கள் 2 பேரும் பல
இடங்களுக்கு சென்று வந்தோம். மேலும் மலர்செல்வன் என்னை திருமணம் செய்து
கொள்வதாக கூறினார். இதையடுத்து நாங்கள் 2 பேரும் பலமுறை உல்லாசம்
அனுபவித்தோம். மேலும் எனக்கு வேறு இடத்தில் இருந்து வந்த
மாப்பிள்ளையையும் அவர் திருமணம்செய்ய வேண்டாம் என்று என்னிடம் கூறினார்.
எனவே மலர்செல்வனை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் நான் வீட்டில்
பார்க்கும் மாப்பிள்ளையை மறுத்து வந்தேன். நானும், மலர்செல்வனும் 2 1/2
ஆண்டுகளாக ஜாலியாக இருந்தோம். எப்படியும் திருமணம் செய்து கொள்வார் என்ற
நம்பிக்கையில் இருந்தேன். இந்நிலையில் அவர் தர்மபுரி மாவட்டம் அரூர்
போலீஸ் நிலையத்திற்கும், நான் கிருஷ்ணகிரி ஆயுதப்படைக்கும்
மாற்றப்பட்டோம். ஆனாலும் எங்களுக்குள் உள்ள தொடர்பு நீடித்தது.
இந்நிலையில் மலர்செல்வனுக்கு திருமணம் செய்யப்போவதாக எனக்கு தெரியவந்தது.
இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது சரியான பதில் ஏதும் கூறவில்லை. மேலும்
அவருக்கு பல பெண்களுடன் தொடர்பும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருமணம்
செய்வதாக கூறி என்னை அனுபவித்த போலீஸ்காரர் மலர்செல்வன் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுகுறித்து
எஸ்.ஐ. கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த
சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment