ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைவதால் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இம்மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சங்மாவும் போட்டியிட மனு செய்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் மனு செய்திருந்தனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை நேற்று தொடங்கியது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் 2-வது நாளான இன்று மதியம் எதிர்க்கட்சி வேட்பா ளரான சங்மாவின் வேட்பு மனு முதலில் ஏற்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் பதவியில் இருப்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சங்மா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி, பிரணாப் மீது கூறப்பட்ட புகார்கள் குறித்து பதில் அளிக்க அவருக்� �ு அவகாசம் அளித்தார். அதன்படி பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் பதவியை கடந்த மாதம் 20-ம் தேதியே ராஜினாமா செய்துவிட்டதாக அவர் சார்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பன்சால் இன்று பிற்பகல் தேர்தல் அதிகாரியிடம் பதிலளித்தார். பிரணாப்பின் இந்த பதிலை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி, அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக பன்சால் அறிவித்துள்ளார்.
விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
No comments:
Post a Comment