அஜித் குமாரின் நடிப்பில் ஆக்ஷன் திரில்லராக தயாராகி இருக்கும் பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இந்த இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகளும் நடைபெற்றன. இந்த விழா இன்றைய தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த விழா நடக்க இருந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க இருந்தார்கள். ஆனால் நிர்வாக பிரச்சினைகள் காரணமாக இந்த விழா தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பில்லா 2 படத்தின் தயாரிப்பாளரான சுனிர் கேடர்பால், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த டிரெய்லர் தீம் மியூசிக்குடன், 105 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
No comments:
Post a Comment