கடந்த 2004-ல் சோனியா காந்தியை பிரதமராக்குவதில் எனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பிறந்த சோனியா காந்தி இந்த நாட்டின் பிரதமர் ஆகக்கூடாது என்று ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தி, காங்கிரஸ் கட்சியிலிருந� ��து வெளியேறியவர் பி.ஏ. சங்மா. அந்த அவரது நிலைப்பாட்டில் இப்போதும் மாற்றம் இல்லை என்பதை அவர் உறுதிபடக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பி.ஏ. சங்மா, அசாமில் உள்ள கவுகாத்தியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் இது குறித்து கூறியதாவது, "வெளிநாட்டில் பிறந்த யாரும் ஜனாத� �பதி, பிரதமர் ஆவதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த எனது கருத்து அன்றும், இன்றும், என்றும் மாறாது. வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.
விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
No comments:
Post a Comment