Friday, 30 March 2012

சச்சின் - யுவராஜ் சந்திப்பு



லண்டன்: "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்டு வரும் யுவராஜ் சிங்கை, லண்டனில் சந்தித்தார் சச்சின். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ். இவரது நுரையீரலின் நடுவே "கேன்சர்' கட்டி ஏற்பட்டது. இதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் "கேன்சர்' ஆய்வு மையத்தில் "கீமோதெரபி' சிகிச்சை மேற்கொண்டார். மூன்று கட்ட சிகிச்சை முடிந்� ��ு "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். தற்போது, விரைவாக உடல்நலம் தேறி வருகிறார்.இதற்கிடையே, தனது கால் காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள லண்டன் சென்ற சச்சின், அங்கு யுவராஜை நேரில் சந்தித்தார். அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். நண்பர் ஒருவரின் "அபார்ட்மென்ட்டில்' இருவரும் ஒரு மணி நேரம் செலவிட்டனர். அப்போது யுவராஜ் முழுமையாக குணமடைந்து, விரைவில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும� ��ன சச்சின் விருப்பம் தெரிவித்தார்.

sachin meets yuvraj



http://tamil-shortnews.blogspot.com

No comments:

Post a Comment