இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 1200 பேஸ்புக் கணக்குகள் ஹெக் செய்யப்பட்டமை குறித்த புகார்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்றும் இந்த வருடத்தில் இரண்டு மாத காலப் பகுதிக்குள் மட்டும் இது தொடா்பான 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் இலங்கை கணனி அவசரப்பிரிவு குழுவின்(CERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹண பல்லியகுருகே தெரிவித்துள்ளார். இவ்வாறான முறைப்பாடுகள் தொடா்ந்து அதிகாித்த வண்ணம் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இது தவிர மின்னஞ்சல்கள், இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை குறித்தும் சுமார் 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
No comments:
Post a Comment