Friday, 20 January 2012

அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள:பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்

'மயக்கம் என்ன' படத்தில் தனுஷ் எழுதிய பாடலுக்கு எதிர்ப்பு
கிளம்பியுள்ளது. இப்படத்தில் காதல் என் காதல் என கண்ணீருல.. என்று
தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் அடிடா அவள, உதடா அவள, வெட்றா
அவள, தேவையே இல்ல என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் பொண்ணுங்க
எல்லாம் வாழ்வின் சாபம் என்ற வரியும் இடம் பெற்றுள்ளது.
இவை பெண்களை இழிவுபடுத்துபவை என்றும் அவர்களுக்கு எதிராக வன்முறையை
தூண்டுபவை என்றும் ராமசுப்பிரமணியம் என்பவர் புகார் மனுவில் குறிப்பிட்டு
உள்ளார். பெண்களை சக்தி என்று கூறுகிறோம். ஆனால் இந்த பாடல் பெண்களை
கொண்டாடும் நாம் கலாசாரத்துக்கு முற்றிலும் எதிரானது என்று கூறினார்.
இந்த பாட்டை தனுசும் படத்தின் இயக்குனர் செல்வராகவனும் இணைந்து
எழுதியுள்ளனர். மயக்கம் என்ன படம் ரிலீசாகி பல நாட்களுக்கு பிறகு
பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்கு தனுஷ் தரப்பில் வியப்பு
தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பாடல்
எழுதப்படவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment