Friday, 20 January 2012

டைரக்டர் விஜய்க்கும் எனக்குமான உறவு குறித்து நான் நிறைய சொல்லி விட்டேன்--அமலாபால்

அதர்வாவுடன் "முப்பொழுதும் உன்கற்பனைகள்' படத்துக்காக டூயட் பாடிக்
கொண்டிருக்கிறார் அமலாபால். ஒரே படத்தில் ரசிகர்களின் மனம் கொத்திய மைனா.
முரளி மகன் அதர்வா எப்படி?
ரொம்ப சின்சியர் கேரக்டர். எப்போதும் எதாவது யோசித்துக் கொண்டே
இருப்பார். நடிப்பில் பின்னி எடுக்கிறார். நல்லா டான்ஸ் ஆடுகிறார். முரளி
ஸôருக்குக் கேரளத்தில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அவருடைய மலையாளப்
படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.
தமிழிலும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். முரளி ஸôரைப் பிடிக்கும்
என்பதால் அதர்வாவை எனக்குப் பிடித்துவிடவில்லை. அதர்வா இதுவரை என்னிடம்
நிறைய பேசியிருக்கிறார். அப்பா ஞாபகம் வந்தால் மட்டும் அவர் கண்கள்
கலங்குவதைப் பார்த்திருக்கிறேன். எங்க அம்மா முரளியின் தீவிர ரசிகை
என்பதால், அதர்வா எப்போதும் அவருக்குச் செல்லம். அதர்வா குட் கேரக்டர்.
மை குட் ஃப்ரெண்ட்.
மறுபடியும் விஜய் இயக்க, விக்ரம் நடிக்க நீங்களும் நடிக்கிறீங்களாமே?
இந்தக் கேள்வியை ஏன் இப்படி கேட்குறீங்க? டைரக்டர் விஜய்க்கும் எனக்குமான
உறவு குறித்து நான் நிறைய சொல்லி விட்டேன். மறுபடியும் அதை மையமாக வைத்தே
கேள்விகள் கேட்கப்படுவதன் அர்ததம் எனக்குத் தெரியவில்லை. விஜய் ஸார் ஒரு
கதை சொல்லியிருக்கிறார். அதில் விக்ரம் நடிக்கிறாரா? என்பது எனக்குத்
தெரியவில்லை. கமர்ஷியல் கதை.
இப்போதைக்கு "முப்பொழுதும் உன்கற்பனைகள்' படத்தில் அதிக கவனம்செலுத்தி
வருகிறேன். அது முடிந்த பின்னர்தான் புதுப்படம் பற்றிப் பேசுவேன். விஜய்
இயக்கத்தில் நடிப்பேனா என்பது குறித்து முடிவெடுக்கவில்லை.

No comments:

Post a Comment