பகவான் கிருஷ்ணரை எத்தனையோ பெண்கள் காதலித்தனர் என்று நாம்அறிகின்றோம்.
புராணங்கள், இதிகாஷங்கள் உட்பட இந்து சமய நூல்கள் பலவும் இதை சொல்லி
நிற்கின்றன. ஆனால் இன்றைய கலியுகத்தில் அதுவும் இருபதாம் நூற்றாண்டில்
இராவணனை காதலிக்கின்ற பெண் ஒருவரை அறிய முடிகின்றது. இது கட்டுக்
கதையோ,கற்பனையோ அல்ல. உளவியல் அறிஞர்கள் பலரையும் திக்குமுக்காட
வைத்திருக்கின்றஅதிசயமான உண்மை. இராவணன் மீது காதல் வசப்பட்டு உள்ளார்
வங்காளப் பெண் ஒருவர். இவரது கனவில் காலை, மாலை எப்பொழுதும் இராவணன்
பத்துத் தலைகளுடன் தோன்றுகின்றார் என்று காதல் மயக்கத்தோடு கூறுகின்றார்.
இராவணனைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தால் போதும் இராவணன்
அழகிய பத்துத் தலைகளுடன் கண் முன் தோன்றி விடுகின்றார் என்கிறார். இவரது
கண்களுக்கு ரோமியோவாக இராவணன் தெரிகின்றான். உளவியல் அறிஞர்கள் குழம்பிப்
போய் உள்ளார்கள். மனிதர்கள் புரிந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல.
No comments:
Post a Comment