Sunday, 29 January 2012

பிறந்தநாளை கொண்டாட காதலியுடன் கொடைக்கானலுக்கு வந்த என்ஜினீயர் பலி

பெங்களூர் தி.நகர் சுல்தானியா பகுதியை சேர்ந்தவர் பூவையா. இவரது மனைவி
கங்கா. இவர்களது மகன் சுதன் (வயது 32). இவர் தொலைத்தொடர்பு என்ஜினீயராக
பணியாற்றி வந்தார். சுதன் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த
வினிதா (28) என்ற பெண்ணைகாதலித்து வந்தார்.
சுதனுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் ஆகும். இதனால் தனது பிறந்தநாளை
காதலியுடன் கொண்டாட எண்ணிய சுதன், தனது காதலியை அழைத்துக்கொண்டு
கொடைக்கானல் சென்றார்.
காதலர்கள் இருவரும் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் ஆட்கள் நடமாட்டம்
குறைந்த இடத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.
அங்கு சுதன் தனது காதலியுடன் நேற்று முன்தினம் காலையில் பிறந்தநாளை
கொண்டாடினார்.
பின்னர் ஓட்டல் அருகே செல்லும் காட்டாற்று வெள்ளத்தில் காதலர்கள்
இருவரும் குளித்தபோது, சுதன் ஆற்றுநீரில்இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அவரை காப்பாற்ற முயற்சிசெய்த வினிதாவின் அலறல் சத்தம் கேட்டு
ஓட்டல் ஊழியர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் சுதனின் உடலை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குகொண்டு
சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுதனின் காதலி வினிதாவை சம்பவ இடத்திற்கு
அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது
வினிதாகூறியதாவது:-
சுதனின் பிறந்தநாளை கொண்டாட நாங்கள் கொடைக்கானல் வந்தோம். அங்குள்ள
லாட்ஜில் காலையில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு இருவரும் மது அருந்தினோம்.
பின்னர் மாலையிலும் இருவரும் மது அருந்தினோம். அப்போது அருகில் உள்ள
ஆற்றில் நாங்கள் இருவரும் குளிக்கச் சென்றோம்.
ஆற்றில் குளித்து விளையாடிக்கொண்டு இருந்தோம். அப்போது ஆற்றில் இருந்த
பாறை வழுக்கியதில், சுதன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்துச்
செல்லப்பட்டார். நான் அவரை காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் நான்
எவ்வளவோ முயற்சித்தும் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை. என்னால்இந்த
அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment