Sunday, 15 January 2012

ஓடும் பேருந்தில் வன்புணர்ந்து கொல்லப்பட்டார் மாணவி

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பேருந்தில் கல்லூரி சென்று வந்த பெண்ணை
பேருந்திலேயே வன்புணர்ந்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இது பற்றி கூறப்படுவதாவது:
ஒடிசாவின் ராணிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது
கிராமத்திலிருந்துஅருகிலுள்ள பத்ராக் நகரிலுள்ள கல்லூரியில்
படித்துவந்தார். தினமும் பேருந்தில் சென்றுவரும் பழக்கமுடைய அம்மாணவியை
நேற்று மாலை ஓடும் பேருந்திலேயே ஒரு கும்பல் மிரட்டி வன்புணர்ந்துள்ளது.
அந்தப் பேருந்தின் நடத்துனரும்இக்கொடூரச் செயலுக்கு உடந்தையாய்
ஈடுபட்டார். மயங்கி விழுந்த அந்த மாணவியை 2 வாலிபர்கள் பத்ராக் நகரில்
உள்ள மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் தூக்கி வந்தனர். மாணவியை
பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த 2 வாலிபர்களும் ஆஸ்பத்திரியில்
இருந்து தப்பி ஓடி விட்டனர். அதன் பிறகே அந்த மாணவி வன்புணர்ந்து
கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இது பற்றி தகவல் பரவியதும், அந்த மாணவியின் பெற்றோர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை அதிரடி வேட்டை நடத்தி பேருந்தின்
ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் கைது செய்தனர். மாணவியை வன்புணர்ந்து
கொன்ற கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment