த்ரிஷா, தமன்னாவுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக
கூறியிருக்கிறார் நடிகர் விதார்த். கொள்ளைக்காரன் படம் ரிலீசான
மகிழ்ச்சியில் இருக்கும் விதார்த், தனது வருங்கால திட்டம் மற்றும் ஆசைகளை
கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில். எனக்கு த்ரிஷா, தமன்னா
போன்ற நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்கஆசையாக இருக்கிறது. ஆனால் அதெல்லாம்
தானாக நடக்கும் என்கிற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது, என்று
கூறியுள்ளார்.
மைனா என்ற வெற்றிப்படத்தில் நடித்த பிறகும் விதார்த் இன்னமும்
யதார்த்தமான நாயகனாகவே ரியல் லைப்பிலும் இருக்கிறாராம். கதை சொல்ல வரும்
புதுமுக இயக்குனர்கள் கூட, அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை, மனசு கோணாமல் நடந்து கொண்டார். நம்மையும் மதித்து கதை
கேட்டார், என்று திரையுலகைச் சேர்ந்த பலரும் விதார்த்தை பாராட்டி
வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
No comments:
Post a Comment