அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் இந்தியாவின் வரைபடம் தவறுதலாக
வெளியிடப்பட்டது. இந்த தவறான வரைப்படத்திற்கு இந்தியா கடுமையாக கண்டனம்
தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇணையதளத்தில் உள்ள இந்திய
வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதியாக வெளியிட்டுள்ளதால்
நாட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வரைபடத்தில் காஷ்மீரின்ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது
போன்றும் மற்றொரு பகுதி சீனாவின் ஒரு பகுதி என்றும் அதற்கு இந்தியா உரிமை
கொண்டாடுவது போன்றும் வரைபடம் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா கடுமையான
கண்டனத்தை தெரிவித்ததோடு அமெரிக்கா இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்றுவலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment